தென் அமெரிக்க மொழிகள்

தென்னமெரிக்காவில் உள்ள முதன்மை ஐரோப்பிய மொழிகள்.

தென் அமெரிக்காவில் பேசப்படும் மொழிகளை மூன்று பரந்த குழுக்களில் அடக்கலாம்: குடிமைப்படுத்திய (முன்னாள்) நாடுகளின் மொழிகள்; பல உண்ணாட்டு மொழிகள், (இவற்றில் சிலவற்றிற்கு குடிமைப்படுத்திய நாட்டு மொழிகளுக்கு இணையான அலுவல்முறை தகுதி தரப்பட்டுள்ளன) ; மற்றும் சிறுசிறு பகுதிகளில் வந்தேறிகளால் பேசப்பட்டு பெரும்பான்மை மொழிகளின் தாக்கத்திலிருந்து தப்பிய பல்வேறு பிற மொழிகள்.

முதன்மை மொழிகள்

இலத்தீன அமெரிக்காவிலுள்ள உண்ணாட்டு மொழிகள்

அமெரிக்காவின் ஐரோப்பியக் குடிமைப்படுத்தலின் செயல்முறையால் புகுத்தப்பட்ட மொழிகள் பெரும்பாலும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஆகும். போர்த்துக்கேயமும் எசுப்பானியமும் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழிகளாகும். ஒவ்வொன்றும் ஏறத்தாழ 192 மில்லியன் நபர்களால் பேசப்படுகின்றன. டச்சு சுரிநாமின் அலுவல் மொழியாக விளங்குகிறது; கயானாவில் இந்தி, அரபி உட்பட பல்வேறு உள் நாட்டு மொழிகள் என குறைந்தது 12 மொழிகளாவது பேசப்பட்டாலும் ஆங்கிலம் அலுவல் மொழியாக உள்ளது. ஆங்கிலம் போக்லாந்து தீவுகளிலும் முதன்மை மொழியாகும். பிரான்சிய வெளிநாட்டு ஆட்புலமான பிரெஞ்சு கயானாவில் பிரான்சியம் அலுவல்முறை மொழியாகும்.

உள் நாட்டு மொழிகள்

தென்னமெரிக்காவின் மொழிக் குடும்பங்கள் (எசுப்பானிய ஆதிக்கத்திற்கு பின்னர் விரிவான கெச்வா,ஐமர,மபுதுங்கன் மொழிகளைத் தவிர).

தென்னமெரிக்காவின் உள்நாட்டு மொழிகளாக பெரு, எக்குவடோர், பொலிவியாவில் கெச்வா மொழியும்; பரகுவையிலும் பொலிவியாவில் சிறுபான்மையாகவும் குவாரனி மொழியும் ; பொலிவியா, பெருவிலும் சிறிதளவில் சிலியிலும் ஐமர மொழியும்; தெற்கு சிலியிலும் அரிதாக அர்கெந்தீனாவிலும் மபுதுங்கனும் பேசப்படுகின்றன.

பொலிவியாவில் எசுப்பானியத்துடன் கெச்வா, ஐமர, தூப்பி குவாரனி மொழிகள் இணை அலுவல் மொழிகளாக உள்ளன. கொலொம்பியாவில், நாட்டின் பல்வேறு இனக்குழுக்களின் மொழிகள் அவரவர்களின் பகுதியில் அலுவல் மொழியாக அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது; இன்றளவில் அங்கு 60 உள்நாட்டு மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பெருவில் கெச்வா, ஐமர, மற்றும் பிற உள் நாட்டு மொழிகள் அவை முதன்மையாக உள்ளவிடங்களில் இணை அலுவல்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தென்னமெரிக்காவில் பேசப்பட்டு வந்த பல மொழிகள் இன்று அழிபட்டுள்ளன.

பிரேசிலில், ஏறத்தாழ 180 உள் நாட்டு மொழிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு இனங்கள் அடர்த்தியாக வசிக்கும் பிரேசிலின் வடக்கிலும் மேற்கிலும் கூடிய மொழிகள் பேசப்படுகின்றன. உள்நாட்டு மொழிகளைப் பாதுகாக்க ஃபுனை (Fundação Nacional do Índio) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிற மொழிகள்

தென்னமெரிக்காவில் காணப்படும் பிற மொழிகளாவன: கயானாவிலும் சுரிநாமிலும் இந்தி, சாவகம் ; n அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, சிலி, வெனிசுவேலா, கொலொம்பியா நாடுகளில் இத்தாலியம்; பிரேசில், அர்கெந்தீனா, சிலி, வெனிசுவேலா, கொலொம்பியா, பரகுவை நாடுகளின் சில பகுதிகளில் இடாய்ச்சு

பிரேசிலில், இத்தாலிய, இடாய்ச்சு மொழிகளின் சில வழக்குமொழிகள் சில நகரங்களில் போர்த்துக்கேயத்திற்கு இணையாக அலுவல்மொழி தகுதி பெற இருந்தன.

அர்கெந்தீனாவின் படகோனியாவில் உள்ள டிரிலெவ், ராசன் வரலாற்று நகரங்களில் வேல்சு மொழி பேசப்படுகிறது. பிரேசில், சிலி, பெரு, அர்கெந்தீனா நாடுகளில் குரோவாசிய, போலிய, உருசிய-மொழிபேசும் சிறிய குமுகாயங்கள் இருந்து வருகின்றன. அதேபோல பொலிவியா, கொலொம்பியா, பரகுவை, பெரு, எக்வடார், பிரேசிலில் சப்பானிய மொழி-பேசுவோரும் சிறு தொகுதிகளாக உள்ளனர். அரபு மொழி பேசுவோர், பெரும்பாலும் லெபனானியர், சிரியர்கள் அல்லது பாலத்தீனர்கள், பிரேசில், கொலொம்பியா, அர்கெந்தீனா, பரகுவையிலும் அரிதாக சிலியிலும் காணப்படுகின்றனர். சிலியின் ஈஸ்டர் தீவில் ராப்பா நூயி மொழியும் மாவோரி மொழியும் பேசுவோரைக் காணலாம்.

கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் உயர்மட்ட வகுப்பினரும் கல்வியறிவு பெற்றோரும் பொதுவாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலிய மொழிகளைக் கற்கின்றனர். சுற்றுலா முதன்மை பெறும் இடங்களில் ஆங்கிலமும் மற்ற ஐரோப்பிய மொழிகளும் பேசப்படுகின்றன.

உசாத்துணை

  • Campbell, Lyle. (1997). American Indian languages: The historical linguistics of Native America. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-509427-1.
  • Dixon & Alexandra Y. Aikhenvald (eds.), The Amazonian languages. Cambridge: Cambridge University Press, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-57021-2.
  • Gordon, Raymond G., Jr. (Ed.). (2005). Ethnologue: Languages of the world (15th ed.). Dallas, TX: SIL International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55671-159-X. (Online version: http://www.ethnologue.com).
  • Greenberg, Joseph H. (1987) Language in the Americas. Stanford University Press, CA.- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-1315-4
  • Kaufman, Terrence. (1990). Language history in South America: What we know and how to know more. In D. L. Payne (Ed.), Amazonian linguistics: Studies in lowland South American languages (pp. 13–67). Austin: University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-70414-3.
  • Kaufman, Terrence. (1994). The native languages of South America. In C. Mosley & R. E. Asher (Eds.), Atlas of the world's languages (pp. 46–76). London: Routledge.
  • Key, Mary R. (1979). The grouping of South American languages. Tübingen: Gunter Narr Verlag.
  • Loukotka, Čestmír. (1968). Classification of South American Indian languages. Los Angeles: Latin American Studies Center, University of California.
  • Mason, J. Alden. (1950). The languages of South America. In J. Steward (Ed.), Handbook of South American Indians (Vol. 6, pp. 157–317). Smithsonian Institution Bureau of American Ethnology bulletin (No. 143). Washington, D.C.: Government Printing Office.
  • Migliazza, Ernest C.; & Campbell, Lyle. (1988). Panorama general de las lenguas indígenas en América. Historia general de América (Vol. 10). Caracas: Instituto Panamericano de Geografía e Historia.
  • Poser, William J. (1992) The Salinan and Yurumanguí Data in Language in the Americas. International Journal of American Linguistics 58.2.202-22.PDF
  • Rowe, John H. (1954). Linguistics classification problems in South America. In M. B. Emeneau (Ed.), Papers from the symposium on American Indian linguistics (pp. 10–26). University of California publications in linguistics (Vol. 10). Berkeley: University of California Press.
  • Tax, Sol. (1960) "Aboriginal languages of Latin America"; Current Anthropology 1: 430-436.
  • Tovar, Antonio, y Larrucea de Tovar, C.: Catálogo de las Lenguas de América del Sur (1986). Con clasificaciones, indicaciones tipológicas, bibliografía y mapas. Ed. Gredos, Madrid. Col. Grandes Manuales.
  • Voegelin, Carl F.; & Voegelin, Florence M. (1965). Classification of American Indian languages. Languages of the world, Native American fasc. 2, sec. 1.6). Anthropological Linguistics, 7 (7): 121-150.
  • Voegelin, Carl F.; & Voegelin, Florence M. (1977). Classification and index of the world's languages. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-00155-7.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!