சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு
தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு ஆகும்.[1][2][3]