ராப்பா நூயி மொழி (Rapa Nui) என்பது ஈசுட்டர் தீவு எனவும் அழைக்கப்படும் ராப்பா நுயி தீவில் பேசப்படும் ஒரு கிழக்குப் பொலினீசிய மொழி ஆகும்.[1][2][3]
4000 பேருக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இத்தீவு சிலி நாட்டின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதி ஆகும். மக்கள்தொகைப் புள்ளிவிபரங்களின் படி இத்தீவில் வாழ்பவர்களும், சிலித் தலை நிலத்தில் தம்மை ராப்பா நுயி இனத்தவராகக் கூறிக்கொள்பவர்களுமாகச் சேர்த்து மொத்த மக்கள் தொகை 3700 ஆகும். இம்மக்களிடையே, இவர்களுடைய முதல் மொழி, பேச்சு மொழி என்பன குறித்த புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும், இம்மொழியை முறையாகப் பேச வல்லவர்கள் ஏறத்தாழ 800 பேர் மட்டுமே எனத் தெரியவருகிறது.
மேற்கோள்கள்