ஜேம்ஸ் பாண்ட் என்பது 1953 இல் நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பாத்திரம். பாண்ட் எம்ஐ6 (EM6) என்ற உளவாளி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஒரு பிரித்தானிய நாட்டை சேர்ந்த உளவாளி ஆவார். இவரை பொதுவாக 007 என்றும் அழைக்கப்படுவார்.
இதுவரைக்கும் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து இருபத்தி ஏழு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சான் கானரி, ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் புரோஸ்னன் மற்றும் டேனியல் கிரெய்க் போன்றோர் 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடித்துள்ளார்கள்.[1][2] இந்த திரைப்படத் தொடர்கள் 7 பில்லியனுக்கு அதிகமாக வசூல் செய்து உலகளவில் நான்காவது மிக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது.
↑Poliakoff, Keith (2000). "License to Copyright – The Ongoing Dispute Over the Ownership of James Bond". Cardozo Arts & Entertainment Law Journal18: 387–436.