ஸ்கைஃபால் என்ற படம் லண்டனில் உள்ள என்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் 23 அக்டோபர் 2012 இல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து 26 அக்டோபர் 2012 இல் ஐக்கிய இராச்சியத்திலும் மற்றும் 9 நவம்பர் 2012 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இந்த படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பிரித்தானியத் திரைப்படத்திற்கான அகாடமி விருதினை வென்றது.
தயாரிப்பு
தொடக்கம்
மெட்ரோ-கோல்ட்வின் மேயர் குழுவின் நிதி பிரச்சனைகளால் ஸ்கைஃபால் தயாரிப்பு 2010 முழுவதும் நிறுத்தப்பட்டது. 21 திசம்பர் 2010 இல் எம்.ஜி.எம் இன் நிதி பிரச்சனைகள் முடிந்தன. சனவரி 2011 இல் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி 9 நவம்பர் 2012 என குறிப்பிடப்பட்டது. தயாரிப்பு 2011 முடிவில் தொடங்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.எம் மற்றும் சோனி என்டர்டெயின்மென்ட் ஐக்கிய இராச்சிய வெளியீட்டுத் தேதி 26 அக்டோபர் 2012 என கூறின.[2]
திரைப்படச் செலவுகள் $150 மில்லியன்[3][4] இலிருந்து $200 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[5][6]
முன் தயாரிப்பு
ஆகத்து 2011 இல் செர்பியன் செய்தித்தாள் 'பிலிக்' 'பாண்ட் 23' 'கார்ட் பிளாஞ்ச்' என பெயரிடப்படுள்ளதாக கூறியது. மேலும் ஜெப்ரி டீவரின் ஜேம்ஸ் பாண்ட் புதினத்தினைத் தழுவி இருக்கும் எனவும் கூறியது.[7] 30 ஆகத்து அன்று இயான் தயாரிப்புகள் பாண்ட் 23 மற்றும் கார்ட் பிளாஞ்ச் ஆகிய இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தது. 3 அக்டோபர் 2011 அன்று பதினைந்து இணையதள பெயர்கள் ('jamesbond-skyfall.com' மற்றும் 'skyfallthefilm.com' போன்று) எம்.ஜி.எம் ஆல் வாங்கப்பட்டது. இதைவைத்து ஸ்கைஃபால் என படம் பெயரிடப்பட்டுள்ளது என செய்திகள் பரவின.[8] 3 நவம்பர் 2011 அன்று திரைப்படத்தின் பெயர் ஸ்கைஃபால் என அறிவிக்கப்பட்டது.[9] திரைப்படப் பெயர் பாண்ட் இன் சிறுவயதுப் பெயரினைக் குறிக்கும் மாதிரி இடப்பட்டுள்ளது.[10]
வெளியீடு மற்றும் வரவேற்பு
23 அக்டோபர் 2012 அன்று ராயல் ஆல்பர்ட் ஹால் இலண்டனில் திரையிடப்பட்டது.[11] மூன்று நாட்களுக்கு பின்னர் 26 அக்டோபர் அன்று இங்கிலாந்து முழுவதும் வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 8 நவம்பர் அன்று வெளியிடப்பட்டது.[12]ஸ்கைஃபால் IMAX இல் வெளியிடப்பட்ட முதல் பாண்ட் திரைப்படமாகும்.[13] வட அமெரிக்க IMAX திரையரங்குகளில் வெளியீடு நாளுக்கு ஒரு நாள் முன்னரே வெளியிடப்பட்டது.[14][15]
↑"Skyfall". British Board of Film Classification (BBFC). 12 October 2012. Archived from the original on 12 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.