சிகாகோ ஓ'ஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
---|
|
|
சுருக்கமான விபரம் |
---|
வானூர்தி நிலைய வகை | பொது |
---|
உரிமையாளர் | சிகாகோ நகரம் |
---|
இயக்குனர் | சிகாகோ வானூர்திநிலைய அமைப்பு |
---|
சேவை புரிவது | சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
---|
மையம் | |
---|
கவனம் செலுத்தும் நகரம் | இசுபிரிட்டு ஏர்லைன்சு |
---|
உயரம் AMSL | 668 ft / 204 m |
---|
இணையத்தளம் | flychicago.com/About/... |
---|
ஓடுபாதைகள்
|
---|
திசை
|
நீளம்
|
மேற்பரப்பு
|
அடி
|
மீட்டர்
|
4L/22R
|
7,500
|
2,286
|
அசுபால்ட்டு
|
4R/22L
|
8,075
|
2,461
|
அசுபால்ட்டு
|
9L/27R
|
7,500
|
2,286
|
பைஞ்சுதை
|
9R/27L
|
7,967
|
2,428
|
அசுபால்ட்டு/பைஞ்சுதை
|
10/28
|
13,001
|
3,962
|
அசுபால்ட்டு/பைஞ்சுதை
|
14L/32R
|
10,005
|
3,050
|
அசுபால்ட்டு
|
14R/32L
|
9,685
|
2,952
|
அசுபால்ட்டு/பைஞ்சுதை
|
|
உலங்கூர்தித் தளங்கள்
|
---|
எண்ணிக்கை
|
நீளம்
|
மேற்பரப்பு
|
அடி
|
மீட்டர்
|
H1
|
200
|
61
|
பைஞ்சுதை
|
|
புள்ளிவிவரங்கள் (2012) |
---|
பயணிகள் தொகை | 66,633,503 |
---|
வானூர்தி இயக்கங்கள் | 878,108 |
---|
சரக்கு (மெட்றிக் டன்கள்) | 1,512,186 |
---|
|
|
சிகாகோ ஓ'ஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chicago O'Hare International Airport, (ஐஏடிஏ: ORD, ஐசிஏஓ: KORD, எப்ஏஏ LID: ORD)) அல்லது ஓ'ஹேர் வானூர்தி நிலையம், ஓ'ஹேர் வான்தளம், சிகாகோ பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருங்க ஓ'ஹேர், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் சிகாகோ நகரத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள ஓர் முக்கிய வானூர்தி நிலையம் ஆகும். இது சிகாகோ லூப் எனப்படும் மைய வணிகப் பகுதியிலிருந்து 17 மைல்கள் (27 km) தொலைவில் உள்ளது. இதுவே சிகாகோ பகுதிக்கான முதன்மை வானூர்தி நிலையமாக விளங்குகிறது. லூப்பிலிருந்து 10 மைல்கள் (16 km) தொலைவில் அருகாமையிலுள்ள சிகாகோ மிட்வே பன்னாட்டு வானூர்தி நிலையம் இரண்டாம்நிலை வானூர்தி நிலையமாக அமெரிக்கப் பெருநிலப்பரப்பினுக்குள்ளான பறப்புக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஓஹேரைப் பயன்படுத்தும் பயணிகளில் 45% பேர்கள் (யுனைட்டெட் எக்சுபிரசு உள்ளிட்ட) யுனைட்டெட் ஏர்லைன்ஸ் வான்போக்குவரத்து நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றனர். யுனைட்டெட் ஏர்லைன்சிற்கு ஹூஸ்டன்-புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய முனைய மையமாக இது விளங்குகிறது. அமெரிக்கன் ஈகிள் உள்ளிட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் வான்போக்குவரத்து நிறுவனம் ஓஹேரைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது; ஓஹேரின் 37.08% பயணிகள் இந்த வான்போக்குவரத்து நிறுவனத்தைப் பயன்படுத்துவோராகும். அமெரிக்கன் ஏர்லைன்சிற்கு டல்லசு-வொர்த் கோட்டை வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது பெரிய முனைய மையமாக இது விளங்குகிறது.[4]
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்