இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ் (Ptolemy II Philadelphus) பண்டைய எகிப்தியதாலமி வம்சம் ஆண்ட தாலமி பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் தலாமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தரின் மகன் ஆவார். இவர் தாலமி பேரரசை கிமு 284 முதல் கிமு 246 முடிய 38 ஆண்டுகள் அரசாண்டவர்.பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, இரண்டாம் தாலமியும், தம் உடன் பிறந்த சசோகதரியான இரண்டாம் அர்சினோவை திருமணம் செய்து கொண்டவர்.[1][2]
இரண்டாம் தாலமி கிமு 275-இல் தெற்கு எகிப்தில் அமைந்த நூபியாவின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றினார். கிமு 274-இல் செலூக்கியப் பேரரசின் கீழிருந்த சிரியாவைக் கைப்பற்றினார்.
பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், தாலமி சோத்தரைப் பின்பற்றி, எகிப்தியக் கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.
பிப்ரவரி, 2021-இல் அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய தபோசிரிஸ் மக்னா நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, தாலமி வம்ச காலத்து, 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் தங்கநாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது எகிப்தியக் கடவுள்ஒசிரிசுடன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. [3][4][5][6]
இரண்டாம் தாலமியின் பெற்றோர் தாலமி சோத்தர்-முதலாம் பெரேநைஸ் நாணயம் (இடது)-இரண்டாம் தாலமி மற்றும் சகோதரி & மனைவியான இரண்டாம் அர்சினோ (வலது)
Hauben, Hans (2013). "Callicrates of Samos and Patroclus of Macedon, champions of Ptolemaic thalassocracy". In Buraselis, Kostas; Stefanou, Mary; Thompson, Dorothy J. (eds.). The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power. Cambridge University Press. pp. 39–65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781107033351. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |chapterurl= ignored (help)
Hazzard, R. A. (2000). Imagination of a Monarchy: Studies in Ptolemaic Propaganda. Toronto ; London: University of Toronto Press.
Marquaille, Céline (2008). "The Foreign Policy of Ptolemy II". In McKechnie, Paul R.; Guillaume, Philippe (eds.). Ptolemy II Philadelphus and his World. Leiden and Boston: Brill. pp. 39–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9789004170896. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |chapterurl= ignored (help)
O'Neil, James L. (2008). "A Re-Examination of the Chremonidean War". In McKechnie, Paul R.; Guillaume, Philippe (eds.). Ptolemy II Philadelphus and his World. Leiden and Boston: Brill. pp. 65–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9789004170896. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |chapterurl= ignored (help)