இந்தியாவில் மனித உரிமைகள்இந்தியா வளர்ந்து வருகின்ற நாடு மற்றும் சுயாட்சி, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு மற்றும் இதன் முன்வரலாற்றில் காலணி ஆதிக்கத்தின் கீழிருந்தமை போன்ற நிலைகளை கடந்து வந்தாமையாலும், மிகப் பரந்த நிலப்பரப்ப்பையும் அதனுள் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட மக்களையும் உள்ளடக்கிய சூழல்களில் இந்திய நாட்டின் மனித உரிமைகளை பற்றி அலசுவது என்பது சற்று சிக்கலான விடயமாகும்.[1][2][3]
இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான சமயசார்பு உரிமை, பேச்சுரிமை, செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகள் , நாட்டின் பிறவிடங்களுக்கும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் உரிமை, போன்ற உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுபவைகளாக அமைந்துள்ளன.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களும், தீண்டாமையினர் என்ப்படும் தலித் சமுதாயத்தினரும் அடிக்கடி ஒரு சில முன்னேறிய வகுப்புக் குழுவினரின் மனித உரிமைகள் மீறல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.