அங்கோலா மக்களின் விடுதலை இயக்கம் -- தொழிலாளர் கட்சி (போர்த்துக்கீசம்: Movimento Popular de Libertação de Angola - Partido do Trabalho) அங்கோலா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1956-ம் ஆண்டு துவக்கப்பட்டது.[1][2][3]
இந்தக் கட்சி EME என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அங்கோலா மக்களின் விடுதலை இயக்கத்தின் இளையோர் (Juventude do Movimento Popular da Libertação de Angola) ஆகும்.
1992 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான ஹொசே எடுவார்டோ டோஸ் சான்ட்டோஸ், 1 953 335 வாக்குகள் (49.57%) பெற்று வெற்றி பெற்றார். 1992 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி2 124 126 வாக்குகளைப் (53.74%, 129 இடங்கள்) பெற்றது.