ஹாரி மார்ட்டின்சன் (Harry Martinson, மே 6, 1904 – பெப்ரவரி 11, 1978) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1974 இல் இன்னொரு சுவீட எழுத்தாளரான எய்வின்ட் ஜோன்சன் என்பவருடன் இணைந்து இலக்கியத்துக்கானநோபல் பரிசைப் பெற்றவராவார். நோபல் பரிசுக் குழுவில் இவ்விருவருமே உறுப்பினர்களாக இருந்தமையால் இது சர்ச்சைக்குள்ளானது. கவிதைகள், புதினங்கள் எழுதியவரான இவர் 1978 இல் தற்கொலை செய்து கொண்டார்.[1][2][3]