விழுங்கற்கடுமை (Dysphagia) என்றால் திடமான உணவுகளையும் நீர்ம உணவுகளையும் வாயில் இருந்து இரைப்பைக்கு விழுங்குவதில் உள்ள கடினத்தைக் குறிக்கும் நோயின் உணர்குறியாகும்.[1][2][3][4] இவை நோயின் உணர் அறிகுறிகளாக அ.நோ.வ - 10 [5] இல் வகைப்படுத்தப்பட்டிருப்பினும் சிலவேளைகளில் தனித்துவமான சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுண்டு.[6][7][8] விழுங்கற்கடுமையால் பாதிக்கப்பட்டிருப்போர் சிலவேளைகளில் அதனைப் பற்றி உணருவதில்லை.[9][10]
விழுங்கற்கடுமை போல வேறு உணர்குறிகள் உண்டு; அவற்றுள் விழுங்கல்வலி எனப்படுவது உணவு விழுங்குகையில் உணரப்படும் வலியைக்குறிக்கும்,[11] பிறிதொன்று "தொண்டையில் உருண்டை" (Globus pharyngis) எனப்படும் தொண்டைப்பகுதியில் ஏதோ ஒரு கட்டி ஒன்று அடைப்பதைப் போன்ற உணர்வைக் குறிக்கும். தொண்டையில் உருண்டை அழற்சி காரணமாகவோ அல்லது உளவியல் சம்பந்தமானதாகவோ ஏற்படலாம். உணவை விழுங்குவதற்கு ஏற்படக்கூடிய பயமான உணர்வு விழுங்கற்பயம் அல்லது ஃபாகோபோபியா (phagophobia) என அறியப்படுகின்றது.
விழுங்கற்கடுமை உள்ளோரில் இருமல், மூச்சடைத்தல் போன்றவை பொதுவாகக் காணப்படும். இந்நோயாளிகள் உணவு தொண்டையில் அல்லது மேல் நெஞ்சில் ஒட்டி இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பர், இந்த நிலை உணவு விழுங்கும்போது ஏற்படுகின்றது. சில நோயாளிகள் தமக்கு விழுங்கற்கடுமை இருப்பதை அறிந்திருப்பதில்லை. சிகிச்சை வழங்கப்படாத விழுங்கற்கடுமை ஆபத்தானது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உணவு, நீர்ம வகைகள் நுரையீரலுக்குள் புகும், இது உறிஞ்சல் நுரையீரல் அழற்சி (அசுப்பிரேசன் நியுமோனியா) எனப்படும். இருமல் உறிஞ்சல் நுரையீரல் அழற்சி இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும், எனினும் சிலருக்கு இருமலும் இருப்பதில்லை.
உடற்பரிசோதனை மூலம் நரம்பு சம்பந்தமான நோய்கள் அறியப்படும், உதாரணமாக, ஒரு நபரது வாய் மூடித் திறப்பது; உணவை அரைத்து மெல்லுவது போன்றவை அவதானிக்கப்படும். உணவு விழுங்கும்போது அவதானிப்பதற்காக ஒரு குவளை தண்ணீர் நோயாளிக்குக் குடிக்கக் கொடுக்கப்படும், பின்னர் இயலுமானால் சில உணவுவகைகள் உட்கொள்ளும்போது விழுங்குவது அவதானித்தல் மேற்கொள்ளப்படும். விழுங்கும்போது அதிகளவிலான உமிழ்நீர் உண்டாகுதல், தாமதமான ஆரம்ப விழுங்கல், இருமல், ஈரலிப்பான குரல், கரடுமுரடான குரல் போன்றவை விழுங்கற்கடுமை இருப்பதை உணர்த்துகின்றது.
{{cite book}}
|nopp=
{{cite web}}
M: DIG
anat(t, g, p)/phys/devp/cell/enzy
noco/cong/tumr, sysi/epon
proc, drug(A2A/2B/3/4/5/6/7/14/16), blte