லோட்டஸ் நியூஸ் (Lotus News) என்பது தமிழ் மொழியில் இயங்கிய 'செவன்த் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கைக்கோள் 24 மணி நேர செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 11, 2012 அன்று கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க தொடங்கியது. இது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு தொலைக்காட்சியாக செயல்பட்டது.[1][2]
இந்த சேனல் ஏப்ரல் 2021 இல் நிறுத்தப்பட்டது.[1][2][3]