விஜய் சூப்பர் தொலைக்காட்சி (விஜய் சூப்பர்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர திரைப்படகட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை ஆகஸ்ட் 25, 2016 ஆம் ஆண்டு அன்று ஸ்டார் இந்தியாவால்சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.[2] இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விஜய் சூப்பர் தனது உயர் வரையறு தொலைக்காட்சியை டிசம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.
விஜய் சூப்பர் தொலைக்காட்சி ஆரம்பத்தில் ஆண் சார்ந்த பொழுதுபோக்கு அலைவரிசையாக தொடங்கப்பட்டது, மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழைய தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மொழிமாற்றுத் தொடர்களை ஒளிபரப்பியது. இது மார்ச் 10, 2019 ஆம் ஆண்டு முதல் புதிய சின்னத்துடன் தூள் சினிமா தினம் தினம் என்ற வசனத்துடன் ஒரு நாளைக்கு 6 திரைப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கியது.