பொட்டாசியம் பைசல்பைட்டு (potassium bisulfite) அல்லது பொட்டாசியம் ஐதரசன் சல்பைட்டு (Potassium hydrogen sulfite) என்பது KHSO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மதுபானத் தயாரிப்பில் நுண்ணுயிரகற்றல் என்ற காரணத்திற்காக இது சேர்க்கப்படுகிறது. கூட்டுப் பொருளான பொட்டாசியம் பைசல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E228 என்று எண்ணிட்டுள்ளது[1].
தயாரிப்பு
பொட்டாசியம் கார்பனேட்டுடன்கந்தக டைஆக்சைடு வினைபுரிவதன் மூலமாக இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. வினையில் கார்பன்டைஆக்சைடு முழுவதுமாக வெளியேறும் வரை கந்தக டைஆக்சைடை பொட்டாசியம் கார்பனேட்டு கரைசலில் செலுத்துவதை நிறுத்தக்கூடாது. கரைசல் அடர்த்தியாக்கப்பட்டு பின்னர் படிகமாதலுக்கு அனுமதிக்கப்படுகிறது.