பால்சார் இனப்பெருக்கம் (Sexual reproduction) அல்லது கலவிமுறை இனப்பெருக்கம் எனப்படுவது இரு உயிரினங்களின்மரபுப் பொருட்கள் ஒன்றிணைந்து ஓர் புதிய உயிரினம் உருவாவதைக் குறிக்கும். பால்சார் இனப்பெருக்கத்தில் இரு செயல்பாடுகள் முதன்மையானவை;அவை: ஒடுக்கற்பிரிவு, நிறப்புரிகள் பாதியாக உடைகின்ற செயல்பாடு; மற்றொன்று கருக்கட்டல், இரு பாலணுக்கள் இணைந்து நிறப்புரிகள் முதலில் இருந்த எண்ணிக்கைக்குத் திரும்புதல். ஒடுக்கற்பிரிவின்போது, ஒவ்வொரு சோடியின் நிறப்புரியும் வழமையாக பரிமாறப்பட்டுஒத்த மறுசேர்க்கை நிகழச் செய்கிறது .
பால்சார் இனப்பெருக்க கூர்ப்பு நிகழ்வு புதிரானது. பால்சார்ந்த இனப்பெருக்க உயிரினங்களுக்கான முதல் தொல்லுயிர் எச்ச ஆதாரங்கள் ஏறத்தாழ 1 முதல் 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஸ்டேனிய காலத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுகின்றன.[1] கட்புலனாகத்தக்க உயிரினங்கள் பெரும்பாலானவற்றில், ஏறத்தாழ அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்களில், பால்சார் இனப்பெருக்கமே முதன்மையான இனப்பெருக்க வழியாக உள்ளது. இந்தச் செயல்முறைகள் ஒரேபோல இருப்பதால் பாக்டீரிய இணைவுறுதல், இரண்டு பாக்டீரியாக்களிடையேடி. என். ஏ. மாற்றிக்கொள்வது, பால்சார் இனப்பெருக்கத்துடன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
உயிரியல் கூர்ப்புக் கொள்கைகள் முந்தைய பால்சாரா இனப்பெருக்கத்திலிருந்து பால்சார் இனப்பெருக்கம் உருவானதற்கு பல விளக்கங்கள் அளித்துள்ளன. கிளைப்பாட்டின் தேர்வு அழுத்தம் காரணமாக — தனது கிளைப்பாட்டுத் தொகையில் மாறிவரும் சூழலுக்கேற்ப மிக விரைவாக மாற்றங்களை உண்டாக்கிட கருவுறா இனப்பெருக்கத்தினை விட விரைவான பால்சார் இனப்பெருக்கத்தின் வினைத்திறன்.மேலும் கிளைப்பாடு வேறொரு கிளைப்பாட்டுடன் மட்டுப்படுத்திய வளங்களுக்காகப் போராடும் வகையில் கூர்ப்பு மேம்பட பால்சார் இனப்பெருக்கம் உதவுகிறது.
உசாத்துணைகள்
Pang, K. "Certificate Biology: New Mastering Basic Concepts", Hong Kong, 2004