கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் (இலங்கை வழக்கு: பிரயோக கணிதம்; Applied Mathematics) எனப்படுகிறது. இது அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், வணிகம், தொழில் போன்ற துறைகளில் பயன்பாடுள்ள கணித மாதிரிகளைப் பற்றி விளக்கும் கணிதப் பிரிவாகும்.
தொழிற் கணிதம், புள்ளியியல், இயற்பியற் கணிதம், உயிரியற் கணிதம், பொருளியற் கணிதம், கணித மாதிரியியல், இரகசிய குறியீட்டியல் என பல துறைகளில் கணிதம் நேரடியாக பயன்படுகிறது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்