தகவல் கோட்பாடு கணிதம், மின்னியல், கணினியியல், தொடர்பியல், குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளில் ஒர் அடிப்படைக் கோட்பாடு. தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. இக் கோட்பாட்டை க்ளவுடி சனான் அவர்கள் விருத்தி செய்தார். இவரது 1948 ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை எ மேத்தமடிக்கல் தியரி ஆப் கம்யூணிகேசன் (A Mathematical Theory of Communication) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகப் அமைந்தது.