தாமஸ் சி. சுதோப் (Thomas Christian Südhof) மேற்கு ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கென் என்னும் ஊரில் பிறந்தவர். அமெரிக்கக் குடிமகனான இவர் நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தனது தகவல்தொடர்பை செயல்படுத்துகின்றன என ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய இவரின் கண்டுபிடிப்புகள் பல புதிர்களை வெளிப்படுத்தின.
தற்போது ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு மற்றும் செல்லுலார் உடலியல் துறை மருத்துவத்துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.[1]
இவர் உடலியல் மருத்துவத்திற்காக 2013 ஆண்டிற்கான நோபல் பரிசை மூன்றுபேருடன் பகிர்ந்து கொள்கிறார். அவரிடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் இருவர்: ஜேம்ஸ் ரோத்மன், ரேன்டி சேக்மன் (அமெரிக்க உயிரணு உயிரியலார்) [2]
வாழ்க்கை
1955 ல் ஜெர்மன் கோட்டிங்கென் என்னும் இடத்தில் பிறந்தார். கோட்டிங்கென் மற்றும் ஹனோவர் போன்ற இடங்களில் தனது இளமைப்பருவத்தைக் கழித்தார். 1975 இல் ஹனோவர் வால்டோரில் பட்டதாரி ஆனார். பின்னர் ஆச்சென் பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் மருத்துவம் பயின்றார். பின்னர் 1982 ம் ஆண்டில் குரோமஃபின் உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து எம்டி பட்டம் பெற்றார்.[3]
தொழில்
1983-ல் அமெரிக்கா சென்று பணியில் சேர்ந்தார். 1991-ல் ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாக்ஸ் நிறுவனத்தில் விக்டர் பி விட்டேகர் என்ற ஆய்வகத்தில் உயிர் இயற்பியல் வேதியியல் ஆராய்ச்சி செய்தார். மைக்கேல் ஸ்டுவர்ட் பிரவுன் மற்றும் ஜோசப் எல். கோல்ட்ஸ்டெயின் மேற்பார்வையின் கீழ் டெக்சாஸ் உள்ள மூலக்கூறு மரபியல் துறையில் முனைவரானார்.