இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]
கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில்ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.