புதிய பிரான்சு (New France, பிரெஞ்சு மொழி: Nouvelle-France) 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும். 1712இல் உச்சநிலையில் இருந்தபோது (உத்ரெக்ட் உடன்பாட்டிற்கு முன்னதாக), புதிய பிரான்சின் ஆட்பகுதி நியூபவுண்ட்லாந்து முதல் ராக்கி மலைத்தொடர் வரையிலும் அட்சன் விரிகுடாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலும் பரவியிருந்தது; அக்காலத்தில் இது பிரான்சிய வட அமெரிக்கப் பேரரசு என்றும் இராயல் நியூ பிரான்சு என்றும் அறியப்பட்டது.