காரைக்குடி

காரைக்குடி
—  மாநகராட்சி  —
காரைக்குடி
இருப்பிடம்: காரைக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°04′25″N 78°46′24″E / 10.073500°N 78.773200°E / 10.073500; 78.773200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மாநகர மேயர் முத்துதுரை
சட்டமன்றத் தொகுதி காரைக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். மான்குடி (இ.தே.கா)

மக்கள் தொகை 2,34,523 (2022)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


118 மீட்டர்கள் (387 அடி)

குறியீடுகள்

காரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய மாநகரமாகும்.மாவட்டத்தின்‌‌ முதல் மாநகராட்சி ஆகும் .[4] "செட்டி‌நாடு" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி மாநகராட்சி தமிழ்நாடு அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2022-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 2,34,523 ஆகும். போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன. காரைக்குடி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் காரைக்குடியில் 2022 நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 234523 உள்ளது.[6] இந்திய மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

காரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார்.

திருமயம், திருப்பத்தூர், காரைக்குடிமாநகராட்சி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் நாடாளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.

காரைக்குடி மாநகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. மாநகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.

புகழ்பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. காரைக்குடி நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Karaikkudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  6. "மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு". தினமணி. தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2022/May/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3844557.html. பார்த்த நாள்: 14 May 2024. 
  7. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்


Read other articles:

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (سبتمبر 2018) كيفين داوسون معلومات شخصية الميلاد 18 يونيو 1981 (العمر 42 سنة)نورثالرتون  [لغات أخرى]‏  الطول 6 قدم 0 بوصة (1.83 م) مركز اللعب مدافع الجنسية الممل...

ДьєзDieuze   Країна  Франція Регіон Гранд-Ест  Департамент Мозель  Округ Саррбур-Шато-Сален Кантон Дьєз Код INSEE 57177 Поштові індекси 57260 Координати 48°48′46″ пн. ш. 6°43′14″ сх. д.H G O Висота 205 - 245 м.н.р.м. Площа 9,35 км² Населення 2795 (01-2020[1]) Густота 386,52 ос./км² Ро...

William Hall William Hall 7º Governador do Tennessee Período 1829 Antecessor(a) Sam Houston Sucessor(a) William Carroll Membro da Câmara de Representantes dos Estados Unidos Período 1831 - 1833 Membro do Senado de Tennessee Período 1827 - 1829[1] Dados pessoais Nascimento 11 de fevereiro de 1775 Condado de Surry, Carolina do Norte Morte 7 de outubro de 1856 (81 anos) Condado de Sumner, Tennessee Nacionalidade Americano Cônjuge Mary Alexander Partido Partido Democrático Profis...

Une attaque par déni de service (abr. DoS attack pour Denial of Service attack en anglais) est une attaque informatique ayant pour but de rendre indisponible un service, d'empêcher les utilisateurs légitimes d'un service de l'utiliser. À l’heure actuelle la grande majorité de ces attaques se font à partir de plusieurs sources, on parle alors d'attaque par déni de service distribuée (abr. DDoS attack pour Distributed Denial of Service attack). Il peut s'agir de : l’inondation d

This article lists the provinces of South Africa by their gross regional domestic product (GDP). Rank Province Percentage GDP (2013; ZAR millions)[1] GDP (2013; USD PPP millions)[1] 1 Gauteng 33.8 1,194,140 231,515 2 KwaZulu-Natal 16.0 565,226 109,583 3 Western Cape 13.7 485,545 94,135 4 Eastern Cape 7.7 272,714 52,873 5 Mpumalanga 7.6 269,863 52,320 6 Limpopo 7.3 256,896 49,806 7 North West 6.8 239,020 46,340 8 Free State 5.1 179,776 34,854 9 Northern Cape 2.0 71,142 13,793 S...

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (مايو 2020) تفشى فيروس كورونا المستجد في مصانع اللحوم والدواجن في الولايات المتحدة خلال جائحة كوفيد-19. أثرت هذه الجائحة على عشرات المصانع، ما أدى إلى إغلاق بعضها وتعطيل مص

Шарль Балліфр. Charles Bally Народився 4 лютого 1865(1865-02-04)[1][2][…]Женева, Швейцарія[4]Помер 10 квітня 1947(1947-04-10)[4][2][…] (82 роки)Женева, Швейцарія[4]Країна  ШвейцаріяДіяльність мовознавець, викладач університетуAlma mater HU BerlinЗнання мов французька[2]Заклад

Peta pembagian administratif tingkat pertama Bulgaria Pembagian administratif Bulgaria terdiri atas 28 provinsi (област, oblast) pada tingkat pertama dan 265 munisipalitas (община, obshtina) pada tingkat kedua. lbsPembagian administratif EropaNegaraberdaulat Albania Andorra Armenia1 Austria Azerbaijan1 Belanda Belarus Belgia Bosnia dan Herzegovina Britania Raya Inggris Irlandia Utara Skotlandia Wales Bulgaria Ceko Denmark Estonia Finlandia Georgia1 Hungaria Republik Irlandia Islan...

يو-2324   الجنسية  ألمانيا النازية الشركة الصانعة دويتشه ويرفت[1]ألمانيا النازية[1]  المالك  كريغسمارينه المشغل كريغسمارينه (25 يوليو 1944–8 مايو 1945)[1]  المشغلون الحاليون وسيط property غير متوفر. المشغلون السابقون وسيط property غير متوفر. التكلفة وسيط property غير مت...

This is a list of holders of the office of Lieutenant-Governor of Eastern Bengal and Assam. The office of the Lieutenant-Governor of Eastern Bengal and Assam happened in 1905 due to the creation of the province from the eastern portion of Bengal Presidency and the Assam Province.[1] The Province of Eastern Bengal and Assam existed alongside the Bengal Presidency until it was merged back into the Bengal Presidency and the Assam Province in 1912.[2] List of lieutenant-governors ...

Afro-KaribiaSebuah toko Afro-Karibia di Kilkenny, IrlandiaJumlah populasica. 21,711,860+Daerah dengan populasi signifikan Haiti8,9 juta Republik Dominika8,1 juta Kuba4,9 juta Amerika Serikat2,88 juta[1] Jamaika2,5 juta Puerto Riko420.000 Trinidad dan Tobago452.536[2] Bahama372.000 Guadeloupe403.750 Martinik390.000 Guyana290.000 Barbados253.771 Suriname202.500 Saint Lucia173.765 Curaçao148.000 Guia...

Species of sea snail Conus andamanensis Apertural and abapertural views of shell of Conus andamanensis Smith, E.A., 1878 Scientific classification Domain: Eukaryota Kingdom: Animalia Phylum: Mollusca Class: Gastropoda Subclass: Caenogastropoda Order: Neogastropoda Superfamily: Conoidea Family: Conidae Genus: Conus Species: C. andamanensis Binomial name Conus andamanensisE. A. Smith, 1879 Synonyms[1] Asprella andamanensis (E. A. Smith, 1878) Conus (Phasmoconus) andamanensis E. A. ...

حسين عرب عيسى (بالصومالية: Xuseen Carab Ciise)‏    وزير الدفاع في جمهورية الصومال (9) في المنصب20 يوليو 2011 – 4 نوفمبر 2012 الرئيس حسن شيخ محمود رئيس الوزراء عبدي فارح شردون عبد الحكيم محمود حاجي فقي عبد الحكيم محمود حاجي فقي نائب رئيس الوزراء الصومالي في المنصب20 يوليو 2011 – 4 نوفمبر 20...

Al-Baghdadiya Ash-SharqiyaLingkunganNegaraArab SaudiProvinsi[Provinsi Makkah]]Pemerintahan • Wali kotaHani Abu Ras[1] • Gubernur kotaMish'al Al-SaudKetinggian12 m (39 ft)Zona waktuUTC+3 (AST) • Musim panas (DST)ASTKode pos(5 kode digit dimulai dari 23; e.g. 23434)Kode area telepon+966-12Situs webwww.jeddah.gov.sa/english/index.php Al-Baghdadiya Ash-Sharqiya adalah sebuah pemukiman padat penduduk di kota Jeddah di Provinsi Makkah, tepatnya ...

29-та піхотна дивізія (Третій Рейх)29. Infanterie-Division Емблема 29-ї піхотної дивізії ВермахтуНа службі 1 жовтня 1936 — жовтень 1937Країна  Третій РейхНалежність  ВермахтВид  Сухопутні військаРоль піхотаЧисельність піхотна дивізія ВермахтуУ складі IX-й військовий округГ...

Прапор Reichskriegsflagge на кораблі У цій статті наведено перелік прапорів Військово-морського флоту Німеччини, який включає прапори, штандарти та вимпели, що використовувалися в період між 1935 та 1945 роками німецьким Kriegsmarine та торговим флотом. Зміст 1 Державний та торговельний п...

  提示:此条目的主题不是核苷酸多樣性。 SNP DNA 單核苷酸多態性(英語:Single-Nucleotide Polymorphism,簡稱SNP,讀作/snɪp/)DNA序列中单个核苷酸的替代导致的、且分布于种群中相当一部分个体(如:1%以上)中的基因多样性。例如,对于某种生物,同一位置基因组片段一部分为AAGCCTA,另一部分为AAGCTTA,则认为此处存在SNP、两种基因型属于等位基因。 几乎所有常见的单...

Indian actor This biography of a living person needs additional citations for verification. Please help by adding reliable sources. Contentious material about living persons that is unsourced or poorly sourced must be removed immediately from the article and its talk page, especially if potentially libelous.Find sources: Raveendran actor – news · newspapers · books · scholar · JSTOR (May 2018) (Learn how and when to remove this template message) D...

Turpan 吐鲁番市 • تۇرپان شەھىرىKota setingkat prefekturEmin Minaret di Turpan, TurpanTurpan (merah) di Xinjiang (jingga)NegeriRepublik Rakyat TiongkokWilayahXinjiangDivisi tingkat daerah3Pusat pemerintahan prefekturDistrik GaochangKetinggian terendah−154 m (−505 ft)Zona waktuUTC+8 (China Standard)Situs webTurpan Prefecture-level city Government Turpan (Hanzi sederhana: 吐鲁番; Hanzi tradisional: 吐魯番; Pinyin: Tǔlǔfān; Uighur: تۇر...

Inline piston engine with two cylinders 1964 Sanglas Rovena motorcycle engine (built by Hispano Villiers) 1997 Suzuki GS500 motorcycle engine A straight-twin engine, also known as an inline-twin, vertical-twin, or parallel-twin, is a two-cylinder piston engine whose cylinders are arranged in a line along a common crankshaft. Straight-twin engines are primarily used in motorcycles; other uses include automobiles, marine vessels, snowmobiles, jet skis, all-terrain vehicles, tractors and ultrali...