ஓமான் ஏர் 1970 ஆம் ஆண்டு ஓமான் பன்னாட்டு சேவை (ஓஐஎச்) ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பீட் அல் பாலாச் வானூர்தி நிலையத்தில் பயணிகள் வானூர்தி சேவையை தொடங்கியது.[3] 1972 ஆம் ஆண்டில் மஸ்கத் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு மாற்றியது. 1977 ஆம் ஆண்டில் வளைகுடா விமானத்தை வாங்கியது.
1993 ஆண்டு ஓமான் ஏர் நிறுவப்பட்டது. மார்ச் மாதம் போயிங் 737-300 வானூர்தி மஸ்கத்தில் இருந்து சலாலாவுக்கு சேவையை துவங்கியது.[4] அதே ஆண்டு சூலை மாதம் முதல் பன்னாட்டு வானூர்தி சேவை துபாய்க்கு இயக்கப்பட்டது.[3]
சூலை 2020 நிலவரப்படி, ஓமான் ஏர் மஸ்கத்தில் இருந்து 27 நாடுகளில் 50 இடங்களுக்கு இயக்குகிறது. ஓமான் ஏர் இந்கியவுக்கு மட்டும் 11 நகரங்களுக்கு வானூர்திகளை இயக்குகிறது.[5][6]
↑Air, Oman. "Our Network | Oman Air". www.omanair.com/ (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.