மூலங்கள்: பயணியர் போக்குவரத்து[1] யூரோகண்ட்ரோல் அமைப்பில் செருமானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[2]
மியூனிக் வானூர்தி நிலையம்Munich Airport, (ஐஏடிஏ: MUC, ஐசிஏஓ: EDDM), இடாய்ச்சு மொழி: Flughafen München) செருமனியின்மியூனிக் நகரத்திலிருந்து வடகிழக்கே 28.5 km (17.7 mi) தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[2] இது லுஃப்தான்சா நிறுவனத்திற்கும் இசுடார் அல்லையன்சில் உறுப்பினராக உள்ள வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முனைய நடுவமாக விளங்குகிறது. தொன்மையான பிரைசெங் நகரில் அமைந்துள்ள இந்த நிலையம் முன்னாள் பவேரிய பிரதமராக இருந்த பிரான்சு யோசஃப் இசுட்ராசு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது நான்கு நகராட்சிகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.
1995இல் 15 மில்லியனாக இருந்த பயணிகள் போக்குவரத்து 2006இல் 30 மில்லியனாக இரட்டித்துள்ளது.[3] 1996இல் இது செருமனியின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக உயர்ந்தது. லுஃப்தான்சா நிறுவனத்திற்கு பிராங்க்ஃபுர்ட்டிற்கு அடுத்து இரண்டாவது முனைய நடுவமாக உள்ளது. 2012இல் ஐரோப்பாவில் 38,360,604 பயணிகள் பயன்படுத்திய இந்நிலையம் ஐரோப்பாவில் ஏழாவதாகவும்[1] உலகில் 30ஆவதாகவும்[4] விளங்குகிறது.