இளங்கோவடிகளின் சிலை, பூம்புகார்
இளங்கோவடிகள் சிலை, காரைக்குடி.
இளங்கோ , அல்லது இளங்கோ அடிகள் , தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர்.இவர் சேர மரபைச் சார்ந்தவரென சிலப்பதிகார பதிகம் கூறுகிறது.
[ 1]
இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,[ 2]
சைவக் கொற்றவையையும் [ 3]
போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் இத்தகைய இரத்தபலி பூசை ஏற்கும் கொற்றவை எங்கனம் சைவ சமய தெய்வமாகும்
மேற்கோள்கள்
↑ நூல்வெளி ஆறாம் 27
↑
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை)
↑
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;
ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை; (சிலப்பதிகாரம், வேட்டுவ வரி)
நூல் அமைப்பு கதைமாந்தர் செய்திகளும் கருத்துக்களும்