இரண்டாம் உலகப் போரின் போது பாசிச இத்தாலியின் வேந்திய வான்படை பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்த பஹ்ரைன் மீது 1940ம் ஆண்டு குண்டு வீசித் தாக்கியது. பிரித்தானியப் பேரரசின் பாதுகாவல் பகுதியாக இருந்த பஹ்ரைனில் அமெரிக்காவால் இயக்கப்பட்ட பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. அக்டோபர் 19, 1940 இல் இத்தாலிய வான்படை வானூர்திகள் அவற்றையும் சவூதி அரேபியாவின் தஹ்ரான் நகரிலிருந்த எண்ணெய்க் கிணறுகளையும் தாக்கின. ஆனால் இத்தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை.[1][2]
குறிப்புகள்