29 திசெம்பர் 1969 அன்று, அசாம் ஆளுநரை தலைவராகக் கொண்டு, வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (இன்றைய அருணாச்சலப் பிரதேசம்) ஆளுகைக்கான உச்ச ஆலோசனைக் குழுவான முகமை சபை நடைமுறைக்கு வந்தது. முகமை சபை 1972 அக்டோபர் 2 இல் பிரதேச சபையால் மாற்றப்பட்டது. 15 ஆகத்து 1975 இல் பிரதேச சபை தற்காலிக சட்டப் பேரவையாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில், சட்டப் பேரவை 33 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, அதில் 30 உறுப்பினர்கள் நேரடியாக ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 3 உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர்.[2]
பதவிகள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள்
தற்போதைய பேரவை அருணாசலப் பிரதேசத்தின் பத்தாவது சட்டப் பேரவையாகும்.