வெஸ்ட்மின்ஸ்டர் நகரம் (City of Westminster) இங்கிலாந்தின்லண்டன் நகரத்தின் பெரும்பான்மையான மையப்பகுதியையும் வெஸ்ட் என்டின் பெரும்பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ள ஓர் லண்டன் உள்ளாட்சிப் பகுதி (பரோ) ஆகும். இது பழைமை வாய்ந்த லண்டன் நகரப்பகுதிக்கு மேற்கிலும் கென்சிங்டன் மற்றும் செல்சியா வேந்திய பரோவிற்கு நேர் கிழக்கிலும் தேம்சு ஆற்றிற்கு வடக்கிலும் அமைந்துள்ளது. 1965ஆம் ஆண்டில் லண்டன் மாநகரமாக மாற்றியமைக்கப்பட்டபோது இந்த பரோ உருவாக்கப்பட்டது. உருவான சமயத்தில் இதற்கு நகரத்திற்கான தகுநிலை வழங்கப்பட்டது.
இந்த பரோவில் பல பெரிய பூங்காக்களும் திறந்தவெளிகளும் இருந்தபோதும் மக்களடர்த்தி கூடுதலாகவே உள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2008ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 236,000.உள்ளாட்சி அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் நகராட்சி மன்றம் ஆகும்.
பொதுவாக லண்டனுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் பல இடங்கள் இந்த பரோவில் அமைந்துள்ளன. அவற்றில் சில: பக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, 10 டௌனிங் தெரு. பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பரோவில் பழங்கால அரசியல் மாவட்டமான வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சுற்றிய வெஸ்ட்மின்ஸ்டர் மாவட்டம் உள்ளது. அங்காடிகள் நிறைந்த பகுதியாக ஆக்சுஃபோர்டு தெரு, ரிஜென்ட் தெரு, பிக்காடெலி மற்றும் பான்ட் தெரு உள்ளன.இரவுநேரக் களியாட்டங்களுக்கு சோஹோ பகுதி உள்ளது.
காட்சிக்கூடம்
கூர்க்கா ஒருவரின் சிலை
வைட்ஹால் பகுதியில் இரண்டடுக்கு பேருந்துகள்- பிக்பென் கடிகாரம் பின்னணியில்.