பக்கிங்காம் அரண்மனை

பக்கிங்காம் அரண்மனை.
அரசி விக்டோரியா; பக்கிங்காம் அரண்மனையில் தங்கிய முதல் ராணி.

பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace (UK: /ˈbʌkɪŋəm/)[1]) இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது. முதலில் பக்கிங்ஹாம் இல்லம் என அறியப்படும் இவ்விடம் 1703 ல் பக்கிங்ஹாம் பிரபு ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1761ல் மூன்றாம் ஜார்ஜால் அரசி ஷார்லட்டுகான தனிப்பட்ட இல்லமாக பெறப்பட்டு அரசியின் இல்லம் என அழைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கட்டிட கலைஞர்கள் ஜான் நாஷ் மற்றும் எட்வார்ட் ப்லோரால் இவ்விடம் விரிவாக்கப்பட்டது. 1837ல் அரசி விக்டோரியா பொறுப்பேற்ற பின் இவ்விடம் அரச குடும்பத்தின் இருப்பிடமானது. கடைசி முக்கிய கட்டமைப்புகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டபட்டன. ஆனால், இவ்வரண்மனை தேவாலயம், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் வெடிகுண்டுகளால் அழிந்து போனது; அங்கே அரசியின் இராஜரீகமான ஓவிய சேகரிப்புகளுக்கான கலைக்காட்சி கூடம் நிறுவப்பட்டு 1962ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. விக்டோரியா அரசியாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை மால் என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன. சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், அரண்மனையின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும்.

வரலாறு

பக்கிங்காம் இல்லம். முதலாம் பக்கிங்காம் பிரபுவுக்காக வில்லியம் விண்டால் வடிவமைக்கப்பட்டது.

முற்காலத்தில் இவ்விடம் மேனர் ஆஃப் எபரி எனும் தனிப்பட்ட பண்ணை நிலமாக இருந்தது. இந்நிலம் டைபர்ன் ஆற்றால் நீர் பாய்ச்ச பெற்றது, இப்போதும் இந்த அறு அரண்மனையின் முற்றத்திற்கு அடியில் தெற்கு சாரியாக பாய்கிறது. இந்நிலம் பல உரிமையாளர்களின் கை மாறியது. பின்னர், 1531ல் எட்டாம் ஹென்ரி, புனித ஜேம்ஸ் மருத்துவமனையை ஈட்டன் கல்லூரியிடம் இருந்து பெற்ற போது, 1536ல் மேனர் ஆஃப் எபரியையும் வெஸ்ட்மினிஸ்டர் அபெவிடம் இருந்து பெற்றார். 500 வருடங்களுக்கு பிறகு இந்நிலம் திரும்ப அரச கைகளுக்கே திரும்ப வந்தது.

அரச இருப்பிடம்

முதலில் இவ்விடம் அரசி ஷார்லட்டின் தனிப்பட்ட இல்லமாக இருந்தது. அதுவரை புனித ஜேம்ஸ் அரண்மனையே அதிகாரப்பூர்வ அரச குடியிருப்பாக இருந்து வந்தது. 1762ல் கட்டிடத்தின் மறுவடிவமைப்பு தொடங்கப்பட்டது. 1820ல் நான்காம் ஜார்ஜ் அரியணை ஏறியவுடன் அவ்வில்லத்தினை சிறிய அரண்மனையாக மாற்ற கட்டிட வடிவமைப்பாளர் ஜான் நாஷின் உதவியுடன் சில மாற்றங்களை செய்தார். கார்ல்டனின் இல்லத்தில் இருந்து அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டது, மீதம் ஃப்ரென்ச் புரட்சி சமயம் ஃப்ரான்சில் வாங்கப்பட்டது. வெளி முகப்பின் தோற்றம் நான்காம் ஜார்ஜின் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்ரென்ச் மரபு சார்ந்து கட்டப்பட்டது. மறுசீரமைப்பின் செலவு அதிகமானதுடன் 1829ல் ஜான் நாஷின் ஊதாரித்தனமான வடிவமைப்பு அவரை பக்கிங்காம் அரண்மனை வடிவமைப்பாளரில் இருந்து நீக்கியது. 1830ல் நான்காம் ஜார்ஜின் மறைவுக்கு பின்னர், அவரின் சகோதரர் நான்காம் வில்லியம் எட்வர்ட் ப்லோரை கொண்டு வேலையை முடித்தார். ஒரு கட்டத்தில் அரண்மனையை பாரளுமன்ற விடுதியாக மாற்றவும் யோசித்து இருந்தார்.

அரண்மனை வாக்குசாவடியின் மார்பிள் வளைவை காட்டும் ஓவியம்

பக்கிங்காம் அரண்மனை இறுதியாக 1837ல் விக்டோரிய அரசியின் பதவியேற்பிற்கு பின் அரச இருப்பிடமாக மாறியது. நான்காம் வில்லியம் கட்டிட பணி முடியும் முன்னரே மறைந்து போனதால் அரசி விக்டோரியாவே பக்கிங்காம் அரண்மனையில் தங்கிய முதல் ராணி. அறைகளில் வண்ணங்களும், தங்க மூலாம் பூசல்களும் அமர்களமாகவே இருந்தாலும், ஆடம்பரம் மிக குறைவாகவே இருந்தது. 1840ல் அரசியின் திருமணத்தை தொடர்ந்து, இளவரசர் ஆல்பர்ட் அரண்மனையின் பராமரிப்பு பகுதிகள், வேலையாட்கள் மற்றும் இன்ன பிற குறைகளை சரி செய்தார். 1847ல் கணவனும், மனைவியும் பெருகும் தம் குடும்பத்திற்கு அவ்விடம் சிறிதாக தோன்றியதால் எட்வர்ட் ப்லோரைக் கொண்டு மேலும் ஒரு ஒரு பகுதி தாம்ஸ் கியுபிட்டால் கட்டப்பட்டது. அவ்விடமே பின்னர் அரச குடும்பம் முக்கியமான சந்தர்ப்பங்கள், ட்ரூப்பிங்க் தி கலர் எனும் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட்டத்தை சந்திக்க எற்படுத்தப் பட்ட உப்பரிகையாகும். நடனமாடும் அறையும்,பிற அறைகளும் இந்த கால கட்டதில் கட்டபட்டவையே ஆகும். இளவரசர் ஆல்பர்டின் மரணத்துக்கு முன்னர் இவ்விடம் எப்போதும் இசை நிகழ்ச்சி நடக்கும் இடமாகவும், பகட்டான விழாக்களும் நடைபெறும் இடமாகவும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வருத்தம் சூழ்ந்து கொண்ட நிலையில் அரசி விண்ட்சர் கோட்டையிலேயே தன் பொழுதை கழித்ததுடன் அரண்மனை வாயிலும் பெரும்பாலும் மூடியே இருந்தது.

நவீன வரலாறு

1901ல் ஏழாம் எட்வார்ட் மன்னர் அரியணை ஏறினார். பக்கிங்காம் அரண்மனையின் நடன அறை, பிரம்மாண்ட நுழைவாயில், மார்பில் அறை, பிரம்மாண்ட படிகள், கூடங்கள், வரவேற்பறை என அனைத்தயும் பெல்லெ எபொஃ எனும் பாலாடை வெள்ளை நிறமும், தங்கமுலாமும் பூசப்பட்டது, இந்நிறம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. 1999ல் ராயல் கலக்ஷென் டீபார்ட்மென்ட் வெளியிட்ட புத்தகத்தில் அவ்வரண்மனை 19 பெரிய அறைகளும், 52 முக்கிய படுக்கை அறைகளும், 188 பணியாளர் படுக்கை அறைகளும், 92 அலுவலகங்களும், 78 கழிப்பறைகளையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இது புனித பீட்டர்ஸ்பெர்க் மற்றும் சார்ஸ்கொ செலொவில் இருக்கும் ரஷிய இம்பீரியல் அரண்மனை, உரோம்மில் உள்ள பாபல் அரண்மனை, தி ராயல் பாலஸ் ஆஃப் மாட்ரிட், தி ஸ்டாக்ஹோம் அரண்மனை, வைட் ஹால் அரண்மனை ஆகியவற்றை காட்டிலும் சிறிது. ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 விருந்தினர்கள் கேளிக்கை விருந்திற்கும், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும், இன்ன பிற நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்கப் படுகின்றனர். கார்டன் பார்ட்டி எனப்படும் விருந்து வருடத்திற்கு மூன்று முறை, கோடையிலும், ஜூலை மாதங்களிலும் நடைபெறும். பக்கிங்காம் அரண்மனையின் முன் வருடம்தோறும் நிகழும் தி சேஞ்சிங்க் ஆஃப் கார்ட்ஸ் எனும் நிகழ்ச்சி அனைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்ச்சி கோடையில் தினம்தோறும், பனிகாலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் நடைபெறும். விண்ட்ஸர் கோட்டை எனும் அரண்மனை, பிற மன்னர் அரசின் உடைமைகளான சான்றின்காம் இல்லம், பல்மோரல் கோட்டை போல அல்லாது ப்ரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது. பக்கிங்காம் அரண்மனை, விண்ட்ஸர் கோட்டை, கென்சிங்க்டன் அரண்மனை, புனித ஜேம்ஸ் அரண்மனை ஆகிய அரண்மனைகளில் உள்ள பொருட்கள் இராஜரீக நினைவுச் சின்னமாக பாதுகாக்க பட்டு வரப்படுகிறது. அவை மக்கள் பார்வைக்கு அரசியின் கலைக்கூடத்தில் வைக்கப்படுகிறது. அரண்மனையின் அறைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 1993ல் இருந்து மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும். மே 2009ல் இராஜ குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரிட்டிஷ் அரசு, அரண்மனை மேலும் 60 நாட்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல், அதில் வரும் வருமானம் கொண்டு அவ்வரண்மனையின் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனுமதியளித்தது.

மேற்கோள்கள்

  1. "Buckingham". Collins Dictionary (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 March 2021. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!