விக்டர் வான் லாங் Viktor von Lang |
---|
விக்டர் வான் லாங் |
பிறப்பு | (1838-03-02)2 மார்ச்சு 1838 வியன்னா, ஆத்திரியப் பேரரசு |
---|
இறப்பு | 3 சூலை 1921(1921-07-03) (அகவை 83) வியன்னா, ஆத்திரியா |
---|
தேசியம் | ஆத்ஸ்திரியன் |
---|
துறை | கோட்பாட்டு வேதியியல் |
---|
பணியிடங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
---|
கல்வி கற்ற இடங்கள் | கீசென் பக்லைக்கழகம் |
---|
கற்கை ஆலோசகர்கள் | ஆண்டிரியாசு வான் எட்டிங்காசன் |
---|
முனைவர் பட்ட மாணவர்கள் | பிராங் எசு எக்சனர் |
---|
விக்டர் வான் லாங் (Viktor von Lang) ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1838 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் நாளன்று இவர் பிறந்தார். படிக இயற்பியலின் முன்னோடிகள் மற்றும் நிறுவனர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
1859 ஆம் ஆண்டில் கீசென் பல்கலைக்கழகத்தில் லாங் தனது முனைவர் பட்டத்தை "பிசிகலிசே வெர்கால்ட்னிசே கிறிசுடாலிசியர்டர் கோர்பர்" என்ற தலைப்பில் பெற்றார்.
1865 ஆம் ஆண்டு முதல் 1909 ஆம் ஆண்டு வரை லாங் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்[1]. லாங் எழுதிய கோட்பட்டு இயற்பியல் என்ற புத்தகம் 1867 முதல் 1891 வரையிலான காலத்தில் எட்டு பதிப்புகள் வரை வெளிவந்தது. படிகவியலாளர் வில்லெம் யோசப் கிராலிச்சுடன் இணைந்து படிகமாக்கப்பட்ட பொருள்களின் இயற்பியல் நிலை ஆய்வுகள் என்ற புத்தகத்தையும் இவர் எழுதினார்[2]. 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் மூன்றாம் நாள் இவர் காலமானார்.
நெவில் சிடொரி மாசுகெலைன் இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு கனிமத்திற்கு லாங்கைட்டு என்று பெயரிட்டார்[3].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|