வடக்கு இலினொய் பல்கலைக்கழக பதிப்பகம் (Northern Illinois University Press) என்பது வடக்கு இலினொய் பல்கலைக்கழக பதிப்பகமாகும். வரலாறு, அரசியல், மானுடவியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் ஆண்டுக்கு சுமார் இருபது புதிய புத்தகங்களை வெளியிடுகிறது இப்பதிப்பகம். சுமார் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.[2] செப்டம்பர் 2008இல், இப்பதிப்பகம் சுவிட்ச் கிராசு புத்தகம் என்ற புனைகதை பிரிவினை துவக்கியது. இது நடுமேற்கு ஐக்கிய அமெரிக்காவில் புனைகதை தொகுப்பை வெளியிடும் பிரிவாகும்.