யுத்வீர் சிங்

யுத்வீர் சிங் (Yudhvir Singh) இந்தியாவின் ராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் ஓமியோபதி மருத்துவராவார்.[1][2][3]

ஆக்ரா மற்றும் அலகாபாத்து நகரங்களில் சிங் படித்தார்.[1] 1920 ஆம் ஆண்டு முதல் ஓமியோபதி மருத்துவம் பயிற்சி செய்யத் தொடங்கினார். ஆர்ய சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். 1928 ஆம் ஆண்டில் இவர் தில்லியின் சாந்தினி சவுக்கில் ஓர் ஓமியோபதி இலவச மருந்தகத்தை அமைத்தார். இம்மருந்தகம் பின்னர் மிர் முகமது உசேன் சாகிப்பின் உதவியுடன் டாக்டர் யுத்வீர் சிங் ஓமியோபதி அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டது.[2]

அந்த நேரத்தில், சிங் தில்லியில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார்.

1932, 1941 மற்றும் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார்.[4] சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தின் போது சிங் நான்கு ஆண்டு ஒன்பது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இயக்கங்களின் போது சிங்கின் மனைவி ராணி ராசுவும் கைது செய்யப்பட்டார்.

1935 ஆம் ஆண்டு சிங் தில்லி பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளரானார். 1937 ஆம் ஆண்டில் சிங் தில்லியின் நகராட்சி ஆணையரானாராகப் பொறுப்பேற்று 1952 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

சாந்தினி சவுக் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக யுத்வீர் சிங் தேர்தலில் நின்று போட்டியிட்டார். 4,413 வாக்குகளைப் பெற்று (தொகுதியில் 52.84% வாக்குகள்) தேர்தலில் வெற்றி பெற்றார்.[5]

1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தில்லி மாநில அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் புனர்வாழ்வு, தொழில்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் சிறைச்சாலையாக அமைச்சராக பணியாற்றினார்.[1][6] இவரது ஆட்சிக் காலத்தில் தில்லி ஓமியோபதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அக்டோபர் 1, 1956 முதல் நடைமுறைக்கு வந்தது.[7]

இந்திய அரசாங்கம் யுத்வீர் சிங்கிற்கு 1971 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதும் 1977 ஆம் ஆண்டு பத்மபூசண் விருதும் வழங்கி சிறப்பித்தது.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Nehru Memorial Museum and Library. NMML Manuscripts: An Introduction. New Delhi: Nehru Memorial Museum and Library, 2003. p. 516
  2. 2.0 2.1 Directory & Who's Who of Homeopathic Practitioners. New Delhi: B. Jain, 1970. pp. 93, 119
  3. The Times of India Directory and Year Book Including Who's Who. Bombay: Bennett, Coleman & Co, 1954. p. 840
  4. Taneja, Anup. Gandhi, Women, and the National Movement: 1920 - 47. New Delhi: Har-Anand Publ, 2005. p. 149
  5. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF DELHI
  6. Chander, Jag Parvesh. Remedy for Delhi's Ills. Delhi: Metropolitan Book Co, 1975. p. 5
  7. Dilli Homoeopathic Anusandhan Parishad. Development of Homoeopathy in Delhi பரணிடப்பட்டது 2018-11-28 at the வந்தவழி இயந்திரம்
  8. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 47, 70. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!