மோகன் சிங் தூர் (Mohan Singh Tur) (1915-1979) ஒரு இந்திய அரசியல்வாதியும் அகல் தக்த்தின் முன்னாள் ஜதேதாரும் மற்றும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவரும் ஆவார். [1] இவர் ஜதேதார் மோகன் சிங் தூர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1977-ஆம் ஆண்டில் அகாலி தளத்தின் உறுப்பினராக பஞ்சாபின் தர்ன் தரன் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் குர்தீப் கவுரை மணந்தார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர், லெஹ்னா சிங் தூர் இவரது மகன்களில் ஒருவரும் 1980-ஆம் ஆண்டில் இவரது வாரிசாகவும் இருந்தார்.
இவரது மகன் தர்லோச்சன் சிங் தூர் (1947 - 2016) ஒரு அரசியல்வாதியும் ஆவார்.[5]
மேற்கோள்கள்