மெலனேசிய மக்கள், பாப்புவானிய மக்கள் (51.5%), ஜாவானிய மக்கள் (14.8%), புக்கி மக்கள் (5.3%), அம்போனிய மக்காள் (4.4%), புட்டோனிய மக்கள், (4.1%), மகாஸ்சர் மக்கள்(2.3%), கேய் மக்கள் (2.2%), தெராஜா மக்கள் (1.8%), மினாசா மக்கள் (1.8%), செரம் மக்கள் (1.3%), பிளோர் மக்கள் (1%), சூடானிய மக்கள் (1%), பதக் மக்கள் (1%), தெர்னெட் மக்கள் (0.9%), சீனர்கள் (0.3%), பிறர்: 8.3%
மேற்கு பாப்புவா அல்லது மேற்கு நியூ கினி (West Papua) (இந்தோனேசிய மொழி: Papua Barat) இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும்.
நியூ கினி நாட்டின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத் தலைநகரம் மனோக்வரி என்றாலும், பெரிய பெரிய நகரமாக சோராங் உள்ளது. இம்மாகாணம் 2003ல் நிறுவப்பட்டது. இது தீவு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் புன்சாக் ஜெயா எரிமலை உள்ளது.
2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு பாப்புவா மாகாணத்தின் மக்கள் தொகை 7,60,855 ஆகும்.[1]
2014ல் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 877,437 ஆக இருந்தது.[1] இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு அடுத்து, மேற்கு பாப்புவா மாகாணம் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
2010ல் மேற்கு பாப்புவா மாகாணத்தை 13 மண்டலங்களாகவும், 155 மாவட்டங்களாகவும், தன்னாட்சி கொண்ட நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[3]