மேற்கு பஞ்சாப்


மேற்கு பஞ்சாப் (பாக்கித்தான்) வரைபடம்

மேற்கு பஞ்சாப் (West Punjab), 1947 முதல் 1955 முடிய பாக்கித்தான் நாட்டின் முன்னாள் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகராக லாகூர் நகரம் இருந்தது. 1,60,622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் முன்னாள் பகவல்பூர் சமசுதானம் தவிர்த்த தற்கால இசுலாமாபாத் மற்றும் பஞ்சாப் பகுதிகள் அடங்கியிருந்தன.

மேற்கு பஞ்சாப் லாகூர், சர்கோதா, முல்தான், இராவல்பிண்டி என நான்கு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டிருந்தது.

எல்லைகள்

மேற்கு பஞ்சாப்பின் கிழக்கில் இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதியும், தெற்கில் பகவல்பூர் சமசுதானமும், தென்மேற்கில் சிந்து மாகாணம் மற்றும் பலுசித்தானும், வடமேற்கில் கைபர் பக்துன்வாவும், வடகிழக்கில் ஆசாத் காசுமீரும் எல்லைகளாக இருந்தது..

வரலாறு

பிரித்தானிய அரசு ஆட்சியாளர்கள் பஞ்சாப் பகுதியை, இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை மேற்கு பஞ்சாப் என்றும், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை கிழக்கு பஞ்சாப் என இரண்டாக பிரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னர் மேற்கு பஞ்சாப் பகுதி பாகித்தானும், கிழக்கு பஞ்சாப் பகுதி இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் பாகித்தானியர் மேற்கு பஞ்சாப் பகுதியை கலைத்து விட்டு பஞ்சாப் என்று பெயரிட்டனர். பகவல்பூர் சமசுதானத்தை பாகித்தான் பஞ்சாபுடன் இணைத்தனர்.

மக்கள்

இந்தியப் பிரிவினையின் போது மேற்கு பஞ்சாப் பகுதியில் இசுலாமியர் பெரும்பான்மையின மக்களாகவும், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாகவும் இருந்தனர். மேற்கு பஞ்சாப் பகுதியின் அலுவல் மொழியாக உருது மொழி இருப்பினும், பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழி பேசினர். பஞ்சாபி மொழி எழுதுவதற்கு சாமுகி எழத்துக்களை பயன்படுத்தினர்.

பஞ்சாபியர்கள் புலம் பெயர்தல்

இந்திய விடுதலையின் போது, இலட்சக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் பஞ்சாபி இந்துக்கள் மேற்கு பஞ்சாபை விட்டு வெளியேறி, இந்தியாவின் கிழக்குப் பஞ்சாப் பகுதிகளில் குடியேறினர். அதே போன்று கிழக்கு பஞ்சாப் பகுதியில் இருந்த இசுலாமியர்கள் மேற்கு பஞ்சாப் பகுதிகளில் குடியேறினர்.

ஆட்சி முறை

மேற்கு பஞ்சாப் பகுதியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும்; பாக்கித்தான் அரசின் ஆளுநரும் ஆகத்து 1945 முதல் 14 அக்டோபர் 1955 வரை ஆண்டனர்.

14 அக்டோபர் 1955-இல் மேற்கு பாக்கித்தான் பகுதி உதயமான போது, மேற்கு பஞ்சாப் மாகாணத்தை கலைத்த காரணத்தால், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் ஒழிக்கப்பட்டது.

பணிக் காலம் ஆளுநர், மேற்கு பஞ்சாப்[1]
15 ஆகத்து 1947 - 2 ஆகத்து 1949 சர் பிரான்சிசு முடீ
2 ஆகத்து 1949 - 24 நவம்பர் 1951 சர்தார் அப்தூர் ரப் நித்தர்
24 நவம்பர் 1951 - 2 மே 1953 இசுமாயில் இப்ராகிம் சுண்டிரிகர்
2 மே 1953 - 24 சூன் 1954 மியான் ஐமுனுத்தீன்
26 செப்டம்பர் 1954 - 26 நவம்பர் 1954 அபீப் இப்ராகிம் ரகமத்துல்லா
27 நவம்பர் 1954 - 14 அக்டோபர் 1955 முசுதாக் அகமது குர்மானி
14 அக்டோபர் 1955 மேற்கு பஞ்சாப் மாகாணம் கலைக்கப்பட்டது.
பணிக் காலம் முதலமைச்சர், மேற்கு பஞ்சாப்[1] அரசியல் கட்சி
15 ஆகத்து 1947 - 25 சனவரி 1949 இப்திகார் உசைன் கான்
25 சனவரி 1949 - 5 ஏப்ரல் 1952 ஆளுநராட்சி
5 ஏப்ரல் 1951 - 3 ஏப்ரல் 1953 மியான் மும்தாசு தௌலத் பாக்கித்தான் முசுலீம் லீக்
3 ஏப்ரல் l 1953- 21 மே 1955 மாலிக் பெரோசு கான் பாக்கித்தான் முசுலீம் லீக்
21 மே 1955 - 14 அக்டோபர் 1955 அப்துல் அமீத் கான் தசுதி
14 அக்டோபர் 1955 மேற்கு பஞ்சாப் மாகாணத்தை கலைத்தல்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Ben Cahoon, WorldStatesmen.org. "Pakistan Provinces". பார்க்கப்பட்ட நாள் 2007-10-03.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!