மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Tobacco Research Institute) என்பது 1947ஆம் ஆண்டு இந்திய மத்திய புகையிலை குழுவின் சென்னையினால் நிறுவப்பட்ட ஆராய்ச்சி மையமாகும். [1] இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் 1965ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் செயல்பாட்டினை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமகேந்திரவரத்தில் அமைந்துள்ளது. [2]
1945ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆராய்ச்சி செயல்பாடுகள் உற்பத்தியினை மேம்படுத்த இந்திய மத்திய புகையிலை குழுவினை அமைத்தது. இந்தியாவில் புகையிலை ஆராய்ச்சி நடவடிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் புகையிலை உற்பத்தியை மேம்படுத்த இந்நிறுவனம் 1947 இல் நிறுவப்பட்டது. பின்னர் நிறுவனப் பணிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மேற்கொண்டது.