மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (Central Coalfields Limited (CCL), 1975ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ, ராம்கர், கிரீத் மற்றும் கரண்பூர் பகுதிகளில் 22 நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களும், 40 திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்களும் கொண்டுள்ளது.