மத்திய காலணி பயிற்சி மையம், பட்ஜ் (Central Footwear Training Centre), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பட்ஜ் பட்ஜ் நகரத்தில் 1996-ஆம் ஆண்டில் மேற்கு வங்காள அரசால் நிறுவப்பட்டது. இப்பயிற்சி மையம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்க அரசின் தொழில்நுட்ப கல்விக் குழுவில் இணைந்துள்ளது.[1] மேலும் இப்பயிற்சி மையத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் தோல் காலணிகள் மற்றும் தோல் பொருட்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தோல் பதனிடும் முறை மற்றும் உற்பத்தி செய்தல் குறித்து இளங்கலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது.[2]