புனித பேட்ரிக்கின் நாள்

புனித பேட்ரிக்கின் நாள்
புனித பேட்ரிக்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஆலய கண்ணாடி, புனித பெனின் ஆலயம், அயர்லாந்து
அதிகாரப்பூர்வ பெயர்புனித பேட்ரிக்கின் நாள்
பிற பெயர்(கள்)புனித பேட்ரிக்கின் விழா
பேட்ரிக்கின் நாள்[1][2]
கடைபிடிப்போர்ஐரிய மக்கள் மற்றும் ஐரிய பூர்வீகம் உடையோர்,
கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
வகைகிறித்தவம், கலாச்சாரம், நாடு சார்
முக்கியத்துவம்புனித பேட்ரிக்கின் விழா, அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவகூர[3]
கொண்டாட்டங்கள்பேரணிகள், பச்சை நிற உடையணிதல், ஐரிய பியர் அல்லது விஸ்கி அருந்துவது
அனுசரிப்புகள்திருப்பலி அல்லது பிற வழிபாடுகள்
நாள்17 மார்ச்
நிகழ்வுஆண்டுதோறும்

புனித பேட்ரிக்கின் நாள் (Saint Patrick's Day) அல்லது புனித பேட்ரிக்கின் விழா (Feast of Saint Patrick, ஐரிய மொழி: Lá Fhéile Pádraig) என்பது ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று கொண்டாடப்படும் கத்தோலிக்க சமய மற்றும் கலாச்சார விடுமுறை நாள் ஆகும். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் (அண். கிபி 385–461) இறப்பை நினைவு கூரவும், அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவுகூரவும்[3] ஐரிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கவும்[4] இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

புனித பேட்ரிக்கின் நாள் ஒரு கிறித்தவ விழா நாளாக 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டாடப்பட்டது. இது தற்போது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் (குறிப்பாக அயர்லாந்து திருச்சபை),[5] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் பொதுவாக பேரணியில் செல்வது, ஐரிய மக்களின் மரபு இசை, நடனம், பச்சை நிற உடைகள் அணிவது வழக்கமாகும்.[6] கிறித்தவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பர்.[4][7] இவ்விழா பொதுவாக தவக் காலத்தில் நிகழ்வதாலும், இவ்விழாவன்று நோன்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும் இந்த நாள் மது அருந்துவதோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.[4][6][8][9]

அயர்லாந்து குடியரசு,[10] வட அயர்லாந்து,[11] நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மற்றும் மொன்செராட் ஆகிய இடங்களில் இது பொது விடுமுறை நாளாகும். அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அர்கெந்தீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் இது பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கும் கொண்டாட்டங்கள்

அயர்லாந்தில் கொண்டாட்டங்கள்

மேற்கோள்கள்

  1. "St. Patty's Day celebration packs extra emotion". CBS Evening News. மார்ச் 16, 2013. http://www.cbsnews.com/video/watch/?id=50142993n. பார்த்த நாள்: மார்ச் 22, 2013. 
  2. "100,000 at St. Patrick's Day Block Party in St. Paul". ABC 5 Eyewitness News. 16 மார்ச் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130328153922/http://kstp.com/news/stories/S2966050.shtml?cat=1. பார்த்த நாள்: மார்ச் 22, 2013. 
  3. 3.0 3.1 Kevin Meethan, Alison Anderson, Steven Miles. Tourism, Consumption & Representation. CAB International. {{cite book}}: |access-date= requires |url= (help)CS1 maint: multiple names: authors list (link)
  4. 4.0 4.1 4.2 Circles of Tradition: Folk Arts in Minnesota. Minnesota Historical Society Press. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010. In nineteenth-century America it became a celebration of Irishness more than a religious occasion, though attending Mass continues as an essential part of the day.
  5. ""St Patrick's Day celebrations". Church of Ireland Notes from ''The Irish Times''. Official Church of Ireland website". Ireland.anglican.org. 2011-03-12. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17.
  6. 6.0 6.1 Circles of Tradition: Folk Arts in Minnesota. Minnesota Historical Society Press. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010. The religious occasion did involve the wearing of shamrocks, an Irish symbol of the Holy Trinity, and the lifting of Lenten restrictions on drinking.
  7. Edna Barth. Shamrocks, Harps, and Shillelaghs: The Story of the St. Patrick's Day Symbols. Sandpiper. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010. For most Irish-Americans, this holiday is partially religious but overwhelmingly festive. For most Irish people in Ireland the day has little to do with religion at all. St. Patrick's Day church services are followed by parades and parties, the latter being the best attended. The festivities are marked by Irish music, songs, and dances.
  8. John Nagle. Multiculturalism's Double-Bind. Ashgate Publishing. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010. Like many other forms of carnival, St. Patrick's Day is a feast day, a break from Lent in which adherents are allowed to temporarily abandon rigorous fasting by indulging in the forbidden. Since alcohol is often proscribed during Lent the copious consumption of alcohol is seen as an integral part of St. Patrick's day.
  9. James Terence Fisher. Communion of Immigrants: A History of Catholics in America. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010. The 40-day period (not counting Sundays) prior to Easter is known as Lent, a time of prayer and fasting. Pastors of Irish- American parishes often supplied "dispensations" for St. Patrick s Day, enabling parishioners to forego Lenten sacrifices in order to celebrate the feast of their patron saint.
  10. "Public holidays in Ireland". Citizens Information Board. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010.
  11. "Bank holidays". NI Direct. Archived from the original on 2010-11-22. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2010.

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!