புனித பேட்ரிக் அல்லது புனித பத்ரீசியார் (இலத்தீன்: Patricius; தற்கால ஐரிஷ்: Pádraig; வேல்சு: Padrig) என்பவர் 5ம் நூற்றாண்டைச்சேர்ந்த உரோம-பிரித்தானிய கிறித்தவ மறைப்பணியாளரும், அயர்லாந்தின் அர்மாகின் ஆயராக இருந்தவரும் ஆவார். இவரே அயர்லாந்துக்கு கிறித்துவத்தை கொண்டுவந்தார் என்பர். ஆதலால் இவர் அயர்லாந்தின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். புனித கொலும்பா மற்றும் புனித பிரிஜித் ஆகியோருடன் இவரும் அயர்லாந்தின் பாதுகாவலர் ஆவார்.
இவரின் காலத்தை உறுதியுடன் அறிய இயலவில்லை. ஆயினும் இவர் அயர்லாந்தில் 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பணிபுரிந்தார்.[2] இவரே அயர்லாந்தின் அர்மாகின் முதல் ஆயர் என்பது மரபு.
இவருக்கு சுமார் 16 வயதிருக்கும் போது, பெரிய பிரித்தானியாவில் இருந்த தனது இல்லத்திலிருந்து பிடிக்கப்பட்டு, அயர்லாந்துக்கு அடிமையாக எடுத்துச்செல்லப்பட்டார். ஆறு ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்தப்பின்னர் அங்கிருந்து தப்பி வீடு திரும்பினார். ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டப்பின்பு வடக்கு மற்று மேற்கு அயர்லாந்துக்தில் ஆயராக பணிபுரிந்தார். ஆயினும் அவர் பணிபுரிந்த இடங்களைப்பற்றி சிறிய அளவே அறியக்கிடைக்கின்றது. ஏழாம் நூற்றாண்டு முதலே இவர் அயர்லாந்தின் பாதுகாவலர் என்னும் பட்டத்தின் இவர் வணக்கம் செலுத்தப்பட்டார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
புனித பேட்ரிக்கின் நாள் ஆண்டுதோறும் இவரின் இறந்த நாளான 17 மார்ச் அன்று கொண்டாடப்படுகின்றது.[3] இது அயர்லாந்துக்துக்கு வெளியேயும் கலாச்சாரம் மற்றும் சமய நிகழ்வாக கொண்டாடப்படுகின்றது. அயர்லாந்து மறைமாவட்டத்தில் இது பெருவிழாவும் கடன்திருநாளும் ஆகும்.
திருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.