இந்தக் கட்டுரை பெரும் பிரித்தானியாத் தீவுகள் பற்றியது. தற்போதைய நாடு குறித்து, ஐக்கிய இராச்சியம் என்பதைப் பாருங்கள். 1707 முதல் 1801வரை நிலவிய நாட்டைக் குறித்து, பெரிய பிரித்தானிய இராச்சியம் என்பதைப் பாருங்கள்.
பெரிய பிரித்தானியா (Great Britain) என்பது வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில்ஐரோப்பாக் கண்டத்தின் வட-மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். 209,331 சதுரகிமீ (80,823 சதுர மைல்) பரப்பளவுடன், இது பிரித்தானியத் தீவுகளில் மிகப்பெரியதும், மிகப்பெரிய ஐரோப்பியத் தீவும், உலகின் ஒன்பதாவது பெரிய தீவும் ஆகும்.[6][note 1] கடல்சார் காலநிலை காரணமாக, பருவங்களுக்கு இடையே குறுகிய வெப்பநிலை வேறுபாடுகளே காணப்படுகின்றன. பெரிய பிரித்தானியாவின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது 40 சதவீத பரப்பளவைக் கொண்ட அயர்லாந்து தீவு இதற்கு மேற்கே உள்ளது - இவற்றுடன் சுற்றியுள்ள 1,000 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளுடனும், பெயரிடப்பட்ட கணிசமான பாறைகளுடனும், பிரித்தானியத் தீவுகள் தீவுக்கூட்டத்தை உருவாக்குகின்றன.[8]
9,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பாவின் முதன்மை நிலப்பரப்புடன் இப்போது டோகர்லாந்து என அழைக்கப்படும் ஒரு தரைப்பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்த பெரிய பிரித்தானியாவில்,[9] சுமார் 30,000 ஆண்டுகளாக மனிதர்கள் வசித்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டில், இது சுமார் 61 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது, இது இந்தோனேசியாவில் சாவகம், மற்றும் சப்பானில் உள்ள ஒன்சூ தீவுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட தீவாகும்.[10][11]
↑பெரிய பித்தானியாவின் அரசியல் வரையறை - அதாவது இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, வேல்சு ஆகியவை இணைந்து - பெரிய பிரித்தானியாவின் புவியியல் தீவின் பகுதியாக இல்லாத வைட்டுத் தீவு, ஆங்கிலேசி, செட்லாந்து போன்ற பல கடல் தீவுகளை உள்ளடக்கியது. அந்த மூன்று நாடுகளும் இணைந்து மொத்த பரப்பளவு 234,402 சதுரகிமீ (90,503 சதுர மைல்).[7]
↑"Population Estimates"(PDF). National Statistics Online. Newport, Wales: Office for National Statistics. 24 June 2010. Archived from the original(PDF) on 14 November 2010. பார்க்கப்பட்ட நாள் 24 September 2010.