புனித பார்பரா தேவாலயம், பேர்டிசீவ் அல்லது புனித பார்பரா கத்தோலிக்கத் தேவாலயம் என்பது உக்ரேனின் பேர்டிசீவ் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கப் பாரிஷ் தேவாலயம் ஆகும். இத்தேவாலௌஅம் பரோக் கட்டிடக்கலைக்கு அமைவாகக் கட்டப்பட்டுள்ளது. இது 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் பொலிசிய கார்மலைட் மடம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.[1] உக்ரேனின் தேசிய கட்டடக்கலை நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் பேர்டிசீவ் நகரில் உள்ள குறிப்பிடத்தக்க கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். 1993 ஆம் ஆண்டில் இத்தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபையினால் மீளக்கட்டப்பட்டு வணக்கஸ்தலமாக இன்றுவரை காணப்படுகின்றது.[2]
49°53′36″N 28°35′19″E / 49.8933°N 28.5885°E / 49.8933; 28.5885