பீபால் பாபா (Peepal Baba) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். சுவாமி பிரேம் பரிவர்தன் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். தனது குழுவுடன் இணைந்து இவர் இந்தியாவில் 18 மாநிலங்களில் உள்ள 202 மாவட்டங்களில் 20 மில்லியன் மரங்களை நட்டுள்ளார். 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின்சண்டிகரில்இந்திய இராணுவத்தின் ஒரு மருத்துவருக்குப் பிறந்தார். 11 ஆவது வயதில் இவரது ஆங்கில ஆசிரியர் அளித்த ஊக்கமே 1977 ஆம் ஆண்டில் மரங்களை நடுவதற்கு இவருக்கு ஆர்வத்தை அளித்தது. எனக்கு மரங்களை கொடுங்கள் என்ற அறக்கட்டளையை இவர் நிறுவினார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் ஓர் அரசு சாரா அமைப்பாக இந்த அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் ஓசோ இரச்னீசிடம் சேர்ந்து துறவு பூண்டார். அங்குதான் இவருக்கு சுவாமி பிரேம் பரிவர்தன் என்று பெயர் வழங்கப்பட்டது.
ஆரம்ப கால வாழ்க்கை
பீபால் பாபா 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின் சண்டிகரில் பிறந்தார். இவரது ஆங்கில ஆசிரியர் [1] கொடுத்த ஊக்கத்தால் 1977 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று புனேவில் இருந்த ஒரு பொழுதுபோக்கு மன்றத்தில் இவர் தனது முதல் மரத்தை நட்டார். அன்று முதல் தொடர்ந்து இவர் மரங்களை நட்டு வருகிறார்.[2]
1984 ஆம் ஆண்டில் ஓசோஇரச்னீசிடம் இருந்து ஆசிபெற்ரு இவர் துறவு பூண்டார், "சுவாமி பிரேம் பரிவர்தன்" என்று ஓசோ இவருக்குப் பெயர் வழங்கினார்.[4] சொந்தமாக மரங்களை நட்டு பல வருடங்கள் கழித்து வந்த இவர் 2010 ஆம் ஆண்டில் எனக்கு மரங்களை கொடுங்கள் என்ற அறக்கட்டளையை நிறுவினார். பின்னர் இவர் அதை 2011 ஆம் ஆண்டில் ஓர் அரசு சாரா நிறுவனமாக பதிவு செய்தார்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில், இவரும் இவரது குழுவினரும் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி மரங்களை நடும் பணியைத் தொடர்ந்தனர்.[5] சுமார் 43 ஆண்டுகளுக்குள், அவரும் அவரது குழுவினரும் இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள 202 மாவட்டங்களில் 20 மில்லியன் மரங்களை நட்டுள்ளனர்.[5][2]