பிபிசி உலக சேவை (BBC World Service) உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகும்.[1][2] இந்நிறுவனம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வழங்குகிறது. உலகெங்கும் ஏறத்தாழ 18.8 மில்லியன் மக்கள் இவ்வானொலியைக் கேட்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. [3] இவ்வானொலியில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில்லை.
உலக அளவிலான இந்த சேவைக்கு பிரித்தானிய அரசு நிதி வழங்குகிறது.[4]
மொழிகள்
முன்னாள் பிபிசி உலக சேவை லோகோ
தற்போது கீழுள்ள மொழிகளில் தனிப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் உண்டு.