பன்னாட்டு வனேடியம் கருத்தரங்கு (International Vanadium Symposium) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும். [1] கருத்தரங்கம் என்பது பலதரப்பட்ட வேதியியல் ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு இடைவினை நிகழ்வாகும். வனேடியம் ஆராய்ச்சியின் ஆர்வத்தையும் சிந்தனைகளையும் வலைப்பின்னலில் இக்கருத்தரங்கு பகிர்ந்து கொள்கிறது. பன்னாட்டு வனேடியம் கருத்தரங்கின் முதல் கூட்டம் 1997 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டின் காங்கன் நகரத்தில் நடைபெற்றது. [1] மிகச் சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு உருகுவே நாட்டின் மொண்டேவீடியோவில் நடைபெற்றது.[2]
வனேடிசு விருது என்பது பன்னாட்டு வனேடியம் கருத்தரங்கில் வனேடியம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஓர் ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படும் ஒரு பன்னாட்டு விருது ஆகும். [4] புதுமையான ஆராய்ச்சி செய்து, புதிய பயன்பாடுகளை உருவாக்கி, பெரிய எல்லைகள், பரந்த ஆராய்ச்சி நோக்கம், மற்றும் வனேடிய அறிவியலின் முன்னேற்றத்திற்காக சேவை செய்த ஒரு ஆராய்ச்சியாளருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. [5]
11 ஆவது பன்னாட்டு வனேடியம் கருத்தரங்கக் கூட்டத்தின்படி முனைவர் தினோரா காம்பினோ தலைவராகப் பணியாற்றினார். கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் டெபி சி. கிரான்சு, எசுப்பானிய தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் மிகுவல் பனாரசு, சிட்னி பல்கலைக் கழகத்தின் பீட்டர் லே, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் அலிசன் பட்லர், சாந்தா பார்பரா, ஒசாகா பல்கலைக்கழகத்தின் இரோவாக்கி சசாய், போர்ச்சுக்கல் நாட்டின் லிசுபோவா பல்கலைக் கழகத்தின் இயோவா கோசுட்டா பெசோவா போன்றவர்கள் சமீபத்திய மாநாட்டில் கலந்துகொண்ட சில குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் ஆவர். [1]