பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் திசம்பர் 9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஊழலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.[1][2] ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.
ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரம் முதல் இடத்தில் உள்ளது.[3][4]