பண்டிட் கன்சி ராம் (Pandit Kanshi Ram) (13 அக்டோபர் 1883 - 27 மார்ச் 1915) இவர் ஓர் இந்திய புரட்சியாளராவார்., ஹர் தயால் மற்றும் சோஹன் சிங் பக்னா ஆகியோருடன் கதர் கட்சியை நிறுவிய மூன்று முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். கட்சியின் அடித்தளத்திலிருந்து 1913 வரை இவர் பொருளாளராக பணியாற்றினார். முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிசு இந்திய இராணுவத்தில் கலகங்களைத் தூண்ட முயன்ற கதர் கலகத்தின் ஒரு பகுதியாக 1914 இல் இவர் இந்தியா திரும்பினார். தோல்வியுற்ற பிப்ரவரி சதித்திட்டத்தின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் லாகூர் சதி விசாரணையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் கர்த்தார் சிங் சரபா, விஷ்ணு கணேஷ் பிங்களே ஆகியோருடன் குற்றம் சாட்டப்பட்டு, மார்ச் 27, 1915 அன்று தூக்கிலிடப்பட்டார்.
மேற்கோள்கள்