நியூயார்க் பொது நூலகம் (The New York Public Library, NYPL) நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள பொது நூலகம் ஆகும். ஏறத்தாழ 53 மில்லியன் உருப்படிகள் மற்றும் 92 அமைவிடங்களுடன், நியூயார்க் பொது நூலகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அமெரிக்கக் காங்கிரசு நூலகத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய நூலகமாகவும் உலகின் மூன்றாவது பெரிய நூலகமாகவும் அமைந்துள்ளது.[4] இந்நூலகமானது அரசு சாராத, தனியாரால் நிர்வகிக்கப்படக்கூடிய, இலாப நோக்கமில்லாத கழகம் ஒன்றினால், தனியார் மற்றும் பொது நிதி ஆதாரத்தைக் கொண்டு இயங்குகிறது.[5] இந்த நூலகமானது மன்ஹாட்டன், பிரான்க்சு ஆகிய நகரங்களிலும் மற்றும் இசுட்டேட்டன் தீவிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நுாலகம், நியூயோர்க் மாநிலத்தின் பெருநகரங்களின் கல்விசார் மற்றும் தொழில்சார் நுாலகங்களுடனும் இணைப்பைக் கொண்டுள்ளது. புரூக்ளின் மற்றும் குயின்சு நகர அமைப்புகள் புரூக்ளின் பொது நூலகம் மற்றும் குயின்சு நூலகத்தால் சேவையளிக்கப்படுகின்றன. இந்தக் கிளை நூலகங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கான வாய்ப்பைத் தருவதோடு சுழலும் நூலகங்களையும் கொண்டுள்ளன. நியூயார்க் பொது நூலகமானது, நான்கு ஆராய்ச்சிக்கான நூலகங்களையும் தன் வசம் கொண்டுள்ளது. இந்த நூலகங்களும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டவையேயாகும்.
இந்த நுாலகம், (அலுவல் ரீதியாக, தி நியூ யார்க் பொது நூலகம், அஸ்டர், லெனாக்சு மற்றும் டில்டென் நிறுவனங்கள்) 19 ஆம் நூற்றாண்டில் அடிமட்ட நிலை நூலகங்கள், நூல் விரும்பிகள் மற்றும் செல்வந்தர்களால் நடத்தப்பட்ட சமூக நூலகங்கள், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அமெரிக்க அருளாளர்கள் அல்லது கொடையாளிகளின் நிதி உதவி ஆகியவற்றின் கலவையான முயற்சியால் வளர்த்தெடுக்கப்பட்டது.
நியூயார்க் பொது நூலகத்தின் தலைமைப் பிரிவு கட்டிடமானது, நூலகத்தின் இரண்டு வாயில்களிலும், பொறுமை மற்றும் மனத்திட்பத்தின் பெயரால் நிறுவப்பட்டுள்ள சிங்கத்தின் சிலைகளினால் எளிதில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த சிங்க சிலைகளுடன் கூடிய நியூயார்க் பொது நூலகக் கட்டிடத்தின் முகப்பு தேசிய வரலாற்று அடையாளமாக 1965 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலில் 1966 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.[6] மேலும் நியூயார்க் நகரத்தின் அடையாளமாகவும் 1967 ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டது.[7]
வரலாறு
நிறுவுதல்
ஜான் ஜேக்கப் அஸ்டர் தனது உயிலில் ஜோசப் காக்சுவெலிடம் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் அதற்காக உயில் வழியாக $400,000 (2017 ஆம் ஆண்டின் நிலையில் 11.3 மில்லியன் $ -க்குச் சமானமானது ) [8] 1848 ஆம் ஆண்டு மறைவிற்குப் பிறகு, அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உயிலின் நிபந்தனைகளுக்குட்பட்டு 1854 ஆம் ஆண்டில் கிழக்கு கிராமம் (East Village) மன்ஹட்டனில், அஸ்டன் நூலகத்தைக் கட்டினர்.[9] இந்த நூலகமானது இலவசமாக நூல்களைப் பார்வையிடும் வசதி கொண்டதாகவும் நூல்கள் வெளிச்சுற்றுக்கு அனுமதிக்கப்படாத நிலையும் கொண்டதாக இருந்தது.[10] 1872 ஆம் ஆண்டு வாக்கில், நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் பகுதியில் இந்த நூலகமானது ஆய்வாளர்களின் வளமாக உள்ளதாகவும் ஆய்வுப்பணிகளுக்கு முதன்மையான மேற்பார்வை நூல்கள் கொண்டதாக உள்ளதாகவும் குறிப்பிட்டது.[11]
நியூயோர்க் மாநில சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்று லெனாக்சு நுாலகத்தை ஒரு குழுமமாக சேர்த்தது.[12][13] 1877 ஆம் ஆண்டில் இதற்கான கட்டிடமானது ஐந்தாவது வளாகத்தில் 70ஆவது மற்றும் 71ஆவது தெருக்களுக்கிடையில் கட்டப்பட்டது. நுால்களை நேசிப்பவரும், புரவலருமான ஜேம்ஸ் லெனாக்சு, தன்னிடமிருந்த பெரும் தொகுப்பான அமெரிக்கானா, கலை வேலைகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய புத்தகங்களை (புதிய உலகின் கூட்டென்பர்க் விவிலியம்உட்பட) நன்கொடையாக அளித்தார்.[14][11] தொடக்கத்தில், நூலகம் அனுமதிக்கு கட்டண நடைமுறையக் கொண்டு வந்தது. மேலும் எந்த இலக்கிய படைப்பையும் தொடுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை.[15]
↑"New York Public Library"(PDF). New York City Landmarks Preservation Commission. January 11, 1967. Archived from the original(PDF) on 7 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)