தக்கர் பாபா வித்யாலயா (Thakkar Bapa Vidyalaya) என்பது தமிழ்நாட்டின், சென்னை, தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலைதி நகரில் உள்ள தொழில் பயிற்சி மையமாகும்.[1]
காந்தியடிகள் தொடங்கிய அரிசன் சேவா சங்கத்தின் ஒரு பிரிவாக இந்த தொழிற்பயிற்சி மையம் 1933 சென்னை கோடம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுக்குச் சில திறன்களைக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதற்காக இது உருவாக்கப்பட்டது. ஹரிஜன் சேவா சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராகவும் பொறியாளராகவும் இருந்த தக்கர் பாபாவின் சேவைகளைக் கவுரவிக்கும் வகையில், 1946-ல் தற்போது இருக்கும் இடத்துக்கு ‘தக்கர் பாபா வித்யாலயா’ என்று காந்தியடிகள் பெயர் சூட்டினார்.
இந்த வளாகம் நாலரை ஏக்கர் பரப்பளவில் எளிமையான கட்டிடங்களுடன் அமைதி சூழ்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் எலெக்டிரிசியன், ஃபிட்டர், வயர்மேன், ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர்கண்டிஷனிங், கார்ப்பெண்டரி அண்ட் உட்வொர்க்கிங், வெல்டிங், டெய்லரிங் ஆகிய பயிற்சிகள் செயல்வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் பெரும்பாலானவற்றுக்குத் தேசிய, மாநிலத் தரச்சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இங்கு பயிற்சிக்கு மாதம் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெல்டிங், டெய்லரிங் படிப்புக்குக் கல்வித் தகுதி எதுவும் அவசியம் இல்லை. பயிற்சி முடித்த மாணவர்கள் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். [2]
{{cite web}}
|publisher=