டேவிட் மலான் |
தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | டேவிட் ஜொகானஸ் மலான் |
---|
பிறப்பு | 3 செப்டம்பர் 1987 (1987-09-03) (அகவை 37) ரோகம்ப்டன், இலண்டன், இங்கிலாந்து |
---|
பட்டப்பெயர் | AC, தெ மில்கி வே பாஸ் |
---|
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) |
---|
மட்டையாட்ட நடை | இடக்கை |
---|
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் |
---|
பங்கு | பன்முக வீரர் |
---|
உறவினர்கள் | சார்ல் மலான் (சகோதரர்) டேவின் ஜொகானஸ் மலான் (தந்தை) |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் (தொப்பி 677) | 27 ஜூலை 2017 எ. தென்னாப்பிரிக்கா |
---|
கடைசித் தேர்வு | 1 ஆகஸ்ட் 2018 எ. இந்தியா |
---|
ஒரே ஒநாப (தொப்பி 254) | 3 மே 2019 எ. அயர்லாந்து |
---|
இ20ப அறிமுகம் (தொப்பி 81) | 25 ஜூன் 2017 எ. தென்னாப்பிரிக்கா |
---|
கடைசி இ20ப | 12 மார்ச் 2021 எ. இந்தியா |
---|
இ20ப சட்டை எண் | 29 |
---|
|
---|
உள்ளூர் அணித் தரவுகள்
|
---|
ஆண்டுகள் | அணி |
2005/06 | போலந்து துடுப்பாட்ட அணி |
---|
2006–2019 | மிடில்செக்ஸ் |
---|
2013–2015 | பிரைம் தோலஸ்வர் ஸ்போர்டிங் கிளப் |
---|
2016–2017; 2019 | பெசாவர் சல்மி |
---|
2016/17 | பரிசல் புல்ஸ் |
---|
2017–2019 | குல்னா டைட்டன்ஸ் |
---|
2018 | கேப் டவுன் பிளிட்ஸ் |
---|
2019/20 | குமிலா வாரியர்ஸ் |
---|
2020 | இஸ்லாமாபாத் யுனைட்டட் |
---|
2020–தற்போதுவரை | யார்க்சயர் |
---|
2020-தற்போதுவரை | ஹோபர்ட்ட்சு ஹரிகேன்சு |
---|
2021 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தே து |
பஇ20 |
முதது |
பஅது |
---|
ஆட்டங்கள் |
15 |
19 |
191 |
149 |
ஓட்டங்கள் |
724 |
855 |
11,561 |
5,135 |
மட்டையாட்ட சராசரி |
27.84 |
53.43 |
37.90 |
41.41 |
100கள்/50கள் |
1/6 |
1/9 |
26/60 |
10/25 |
அதியுயர் ஓட்டம் |
140 |
103* |
219 |
185* |
வீசிய பந்துகள் |
156 |
12 |
4,093 |
1,347 |
வீழ்த்தல்கள் |
0 |
1 |
61 |
40 |
பந்துவீச்சு சராசரி |
– |
27.00 |
40.24 |
32.75 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
– |
0 |
1 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
– |
0 |
0 |
0 |
சிறந்த பந்துவீச்சு |
– |
1/27 |
5/61 |
4/25 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
11/– |
4/– |
200/– |
51/– | |
|
---|
|
டேவிட் ஜோகன்னசு மலான் (Dawid Johannes Malan; ; பிறப்பு: செப்டம்பர் 3, 1987) இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இடது கை மட்டையாளரும், இடதுகை நேர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் 2020 திசம்பர் 1 அன்றைய கணக்கின்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பன்னாட்டு இருபது20 மட்டையாளர்களுக்கான தரவரிசையில் 915 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இதுவரை பெற்ற புள்ளிகளில் இதுவே அதிகபட்ச புள்ளியாகும். தனது 7ஆம் வயதில் இவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. [1] அங்கு இவர் பார்ல் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[2]
உள்ளூர் போட்டிகள்
இடது கை மட்டையாளரான மலான் பகுதிநேர நேர்ச்சுழல் பந்துவீச்சாளராகவும் உள்ளார். துவக்கத்தில் போலந்து அணிக்காக விளையாடினார். 2006 ஆம் ஆண்டில் எம்சிசி இளையோர் அணிக்காக விளையாடின் ஆர். ஜூலை 7, 2006 இல் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார். இவரது தந்தை மேற்கு மாகாண அணிக்காகவும்[3] , இவரது சகோதரர் சார்ல் லோபரோ எம்சிசியு அணிக்காகவும் விளையாடினர்.
சர்வதேச போட்டிகள்
ஜூன் 2017 இல் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டத் தொடருக்கான இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியில் இவர் அறிமுகமானார்.[4] சூன் 25, 2017இல் நடைபெற்ற தனது முதல் போட்டியில் 75 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.[5][6] அதே அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். [7] அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 1 ஓட்டமும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 10 ஓட்டங்களையும் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் பகல்-இரவுத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களைப் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[8]
இந்தியன் பிரீமியர் லீக்
2021 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.[9]
சான்றுகள்
வெளி இணைப்புகள்