டேவிட் புரூக்சு (David Brooks ஆகத்து 11,1961[1]) என்பவர் அமெரிக்க எழுத்தாளர், நூலாசிரியர், இதழாசிரியர் மற்றும் பத்தி எழுத்தாளர் ஆவார். நியூயார்க் டைம்ஸின் பத்தி எழுத்தாளராகத் தற்பொழுது உள்ளார்.[2] அரசியல், சமூக அறிவியல் ஆகிய தளங்களில் தம் எண்ணங்களையும் கருத்துகளையும் எழுதி வருகிறார். அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியில் உறுப்பினராகவும் யேல் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார்.
பணிகள்
டேவிட் புரூக்சு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1983 இல் படித்துப் பட்டம் பெற்றார். 1995 இல் தி வீக்லி ஸ்டாண்டர்ட் என்னும் பத்திரிகை தொடங்கப்பட்டபோது அதில் சேர்ந்தார். 2003 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்சில் பத்தி எழுத்தாளாராக சேர்ந்தார். பேர் பெற்ற பத்திரிகைகளான நியூயார்க்கர், தி நியூயார்க் டைம்சு, வாசிங்க்டன் போஸ்ட் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதி வருகிறார். சில நூல்களும் எழுதியுள்ளார்.[3] தற்பொழுது அமெரிக்காவின் மேரிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
சான்றாவணம்